பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும O 133 அவன் அக்காலச் சமுதாயப் போக்கிற்கேற்றபடி செய்தான் என்பதை நாம் அறிவோம். ஆனால், தந்தை யின் மனம் அவ்வாறு நினைக்குமா! அதேபோலக் கைகேயி முறையைத்தான் செய்தாள் என்பதை நாம் அறிகிறோம். ஆனால், தசரதன் இவ்வாறு நினைக்க முடியுமா? அன்பு மிக்கவிடத்துப் பிழை காண்டல் இயலாதன்றோ? இதனாலேயே தசரதனுட்புகுந்து புலம்புகிற கம்பநாடன் அத்தசரதனுக்குப் புத்திரசோகம் உ ண் டா க் கி ய கைகேயியை வாயாரத் திட்டுகிறான், முதற் படலத்தில் அவளைப் புகழ்ந்ததையும் மறந்துவிட்டு. எனவே, அயோத்தி வேந்தன் வாழ்வு வருந்தத் தகுந்த ஒரு முடிவை அடைந்ததிலும் கவிஞன் தன்னையே காண முடிகிறது போலும்! இத்தகையை ஒரு துன்ப அனுபவமே கவிஞன் குழந்தைச் செல்வத்தில் ஈடுபட்டுப் பாடாமைக்குக் காரணம் என்று முடிவு கட்டுவது சரிதானே?