பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அரசியல் கம்பன் காட்டும் அரசியல் நெறிகள் இதுவரை மன்னன் என்ற தலைப்பில் தசரதனைப் பற்றியும் அவனுடைய செயல்கள் பற்றியும் கம்பன் கூறிய முறையை ஒருவாறு கண்டோம். காப்பியத்தோடு தொடர்புடையவன் ஆனதாலும் வான்மீகி அடியொற்றிச் செல்லவேண்டிய சூழ்நிலை இருந்தமையாலும் மன்னன் என்பவன் பற்றியும் அவனுடைய அரசியல் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் தான் நினைத்ததைக் கூற இந்தப் பகுதியில் கம்பனுக்கு வாய்ப்பு ஏற்படவில்லை. பல்லவ மன்னர்கள் அமைச்சர்களுக்கு உரிய இடம் தந்ததாக வரலாற்றிலிருந்து அறிய முடியவில்லை. ஆனால் வள்ளுவன் வழிவந்த கம்பநாடன் ஒர் அரசன் நல்லாட்சி நடத்தவேண்டுமானால் எத்தகைய அமைச்சர்கள் அவனிடம் இருக்கவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நன்கு அறிந்திருந்தான். தசரதன் ஆட்சியைப் பற்றிப் பேசும்போது அவனுடைய அமைச்சர்கள் எத்தகையவர்கள் என்பதை மந்திரப் படலத்தில் 1318 முதல் 1322 வரையுள்ள ஐந்து பாடல்