பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 135 களில் விரிவாகப் பேசுகிறான். இந்த ஐந்து பாடல்களும் திருக்குறளை அடியொற்றியே விரித்துப் பேசுகின்றன. 1318ஆவது பாடலில் இவ்வமைச்சர்கள் மாபெரும் கல்வியாளர்கள் என்றும், சிறந்த அறிஞர்களென்றும் கூறுவதோடு அரசன் சினத்தைப் பொருட்படுத்தாமல் நடுவுநிலைமையையே எடுத்துக் கூறுபவர்கள் என்றும் கூறுகிறான். மேலும் வஞ்சனையை அறவே ஒழித்து அறநெறியில் நிற்பவர்கள் என்றும் பேசுகிறான். மூன்று காலத்தையும் அறியவல்லவர்கள் என்றும் வினைப் பயனால் ஒரு தீமை நேரிடினும் அதைப் போக்கவல்ல ஆற்றலுடையவர்கள் என்றும் 1819ஆவது பாடலில் கூறுகிறான். ஏனைய பாடல்களில் கருவி, இடம், காலம் என்பவற்றை நன்கறிந்து செயலாற்ற வல்லவர்களென்றும் தன்னலமோ தம் உயிர்மாட்டுப் பற்றோ இல்லாதவர் களென்றும் அரசனுடைய சினத்தையும் தாங்கிக் கொண்டு அவனுக்கு நல்லதையே செய்யும் இயல்புடைய வர்கள் என்றும் கூறுகிறான். இந்த ஐந்து பாடல்களில் அமைச்சர்களின் இலக்கணத்தை உலகப் பொதுமறை தந்த வள்ளுவப் பேராசான் கூறியவற்றையே தொகுத்தும் வகுத்தும் பேசுகிறான். தசரதனுடைய ஆட்சியில் வசிட்டன் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் செல்வாக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியிருக்க கம்பநாடன் இத்துணை விரிவாக அமைச்சர்களைப்பற்றிப் பேசியது தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் கால் ஊன்றப்போகும் சோழ மன்னர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று அவன் விரும்பியதையே காட்டிச் செல்கிறது. இராம காதையைப் பொறுத்தமட்டில் அதிற் காணப் படும் மற்றொரு பேரரசனாகிய இராவணனும் அமைச்சர் களைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை. இராவணனுடைய மந்திர ஆலோசனை சபையில் அவன் செய்த தவற்றை எடுத்துக் காட்டும் அமைச்சன் ஒருவன்கூட இல்லை. அதற்குப் பதிலாக