பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 0 அ. ச. ஞானசம்பந்தன் அவன் செயலை ஏற்றுக் கொண்டு போருக்குப் புறப்படுவதுதான் சரி என்று கூறும் அமைச்சர்களே நிறைந்திருந்தனர். அவன் செயல் தவறு என்று எடுத்துக் காட்டியவர்கள் வீடணனும் கும்பகர்ணனுமேயாவர். அதை ஏற்றுக்கொள்ளாத இராவணன் நீங்கள் என்ன அமைச்சர்களா என்று கேட்கிறான். எனவே அறிவுரை கூறவேண்டிய கடமை அமைச்சர்களுடையது என்பதை இராவணன் நன்கறிந்திருக்கிறான். ஆனால் அவனால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் துதிபாடிகளா இருந்துவிட்ட காரணத்தால் அமைச்சின் பயனை இராவணன் அடைய முடியாமல் போய்விட்டது. அமைச்சர்களே அரசனின் கண்களாக இருத்தலின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் போது நன்கு ஆராய்ந்து அவர்களைப் பதவிகளில் அமர்த்த வேண்டும் . இராவணன் இதனைச் செய்யவில்லை. தசரதனது அமைச்சர்கள் கூட, இராமனுக்கு முடிசூட்ட வேண்டும் என்ற தசரதனது திடீர் முடிவை ஏன் என்று கேட்கவில்லை. அமைச்சர்களிடம் தன் கருத்தைத் தெரிவித்த தசரதன் உடனடியாக சுமந்திரனை அனுப்பி இராமனை வரவழைத்தது சரியா? வந்த மகனிடம் முடிசூட்டிக் கொண்டு எனக்கு ஒய்வு தர வேண்டும் என்று கட்டளையிடாமல் பதினான்கு பாடல் களில் மகனிடம் கெஞ்ச வேண்டிய சூழ்நிலை என்ன? என்று இதையாவது அந்த அமைச்சர்கள் கேட்டு இருக்க வேண்டும். எனவே தசரதனைப் பொறுத்தமட்டில் கடமை தவறாத அமைச்சர்கள் கூட செம்மையாகத் தொழிற்பட வில்லை என்று அறிய முடிகிறது. 'ஏன் இத்துணை அவசரம்?' என்று கேட்கும் அமைச்சர்கள் தசரதனிடமும் நீசெய்தது. தவறு என்று எடுத்துச் சொல்லும் அமைச்சர்கள் இராவணனிடமும் இருந்திருந்தால் இராமகாதையே மாறியிருக்கும்.