பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 137 ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் நிலை இதுதான் என்று நினைக்க வேண்டியுள்ளது. பல்லவ மன்னன் மகேந்திர வர்மனிடம் அமைச்சர் களாக இருந்தவர்களும் கடமை தவறியவர்களே என்று திருநாவுக்கரசர் புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடு கிறார். சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிவிட்டார் நாவுக்கரசர். தனியொரு மனிதன் சமயம் மாறுவதால் உலகம் நின்றுவிடாது. அந்தச் சமய மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சமணத் துறவிகளே தவிர மன்னன் மகேந்திர வர்மன் அல்லன். அப்படி இருந்தும் அத்துறவி களின் சொல்லைக் கேட்டு நாவுக்கரசரைத் தண்டிக்க முற்படுகிறான் பல்லவ மன்னன். இதைத் தட்டிக் கேட்கும் அமைச்சர்களும் அவனிடமில்லை. பாண்டியன் செய்தது தவறு என்று இடித்துக் கூறும் அமைச்சர்கள் நெடுஞ் செழியனிடமும் இருந்ததாகத் தெரியவில்லை. இவற்றை யெல்லாம் மனத்துக் கொண்ட கம்பநாடன் மிக விரிவாக அமைச்சர்களின் இலக்கணம் கூறியது முற்றிலும் பொருத்தமுடையதேயாகும். தமிழ்க் காப்பியங்கள் என்று எடுத்துக் கொண்டு பார்த்தால் கம்பனைத் தவிர வேறு யாரும் அமைச்சர் பற்றி விரிவாகப் பாடவில்லை. வடமொழியும் தமிழ் மொழியும் நன்கு அறிந்து தன் காலம் வரையிலுள்ள வரலாற்றையும் நன்கு அறிந்திருக்கிறான் கம்பன். மகேந்திர வர்மன், இராசசிம்மன் முதலிய பேரரசர்கள் தோன்றியுங்கூடப் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நிலை கொள்ளச் செய்ய முடியவில்லை. தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் துரக்கிநிறுத்த முயன்றும் வைரமேகனோடு பல்லவ சாம்ராஜ்ஜியம் சரிந்து விட்டது. இவற்றை யெல்லாம் நன்கறிந்திருந்த கம்பநாடன் பல்லவ மன்னர் களும் அரசர்க்குரிய இலக்கணத்தைப் பெறவில்லை, அரசியலையும் நன்கறிந்திருக்கவில்லை; எனவேதான் இந்த