பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 O அ. ச. ஞானசம்பந்தன் வீழ்ச்சி ஏற்பட்டது என்பதை அறிகின்றான். இதுவரை ஆண்ட பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் என்பதையும், அவர்கள் தமிழ்நாட்டை ஆண்ட300 ஆண்டுகளில் இந்த இனத்தையும் இந்த இனத்தின் நாகரிகம், பண்பாடு ஆகிய வற்றையும் அறிந்திருக்கவில்லை; அறிந்து கொள்ள முயலவுமில்லை என்பதையும் அறிகிறான். எனவே, நுண்மாண்நுழை புலமும் தீர்க்கதரிசனமும் உடைய கவிச்சக்கரவர்த்தி பல்லவ மன்னர்களின் குறை பாடுகள் தலையெடுத்துக் கொண்டிருக்கும் சோழரிடம் இருக்கக் கூடாது என விரும்புகிறான். எனவேதான் தான் இயற்றும் காப்பியத்தில் வாய்ப்பு நேரும் போதெல் லாம் ஒரு நல்ல அரசு எப்படி அமைய வேண்டும், அமைச்சர்கள் எப்படி அமைய வேண்டும், அரசன் எத்தகையவனாக இருக்க வேண்டும் என்பவற்றை. யெல்லாம் அங்கங்கே பேசுகிறான். தசரதனுடைய மந்திர ஆலோசனையில் அமைச்சர் இலக்கணம் பேசிய கம்ப நாடன் அடுத்த படியாக அரசன் இலக்கணத்தைத் தசரதன் மேலேற்றிக் கூறுவதை மன்னன்’ என்ற தலைப்பில் முன்னர்க் கண்டோம். வறிஞன் ஒம்பும் செய் எனக் காத்து அரசு செய்கின்றான்’ என்ற அற்புதமான உவமை மூலம் தசரதன் எத்தகைய மன்னன் என்பதைக் கவிஞன் விளக்கி விடுகிறான். ஒன்பதாம் நூற்றாண்டு அரசியலில் மன்னர்கள் மக்கள் விருப்பத்தை நன்கறிந்து அதற்கு ஏற்றபடி ஆட்சி செய்கிறார்களா என்ற வினாவைக் கம்பன் எழுப்பிக் கொள்கிறான். இந்த நிலையில் இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்கள் அனைவருக்கும் மன்னனே உயிராவான் என்ற கருத்து தமிழசத்தில் வேரூன்றி விட்டது. உடலில் உயிர் தங்கியிருப்பினும் உடலுக்குத் தன்னிச்சையாகத் தொழிற்படும் இயல்பு இல்லை. உயிர் விருப்பத்திற்கேற்ப உடல் இயங்க வேண்டிய சூழ்நிலை என்றுமே உள்ளதாகும். இன்றைய