பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O. 189' மன்னன் உயிர் என்றும், மக்கள் உடல் என்றும் உவமை கூறினால் அதன் பொருள் என்ன?- மன்னன் விருப்பப்படி உடலாகிய மக்கள் இயங்கவேண்டுமே தவிர மக்கள் விருப்பப்படி மன்னன் இயங்கும் நிலை இல்லை. இந்த ஒன்பது நூற்றாண்டுகளில் மன்னன் உயிர் என்ற கருத்திற்கு யாரும் மறுப்புக் கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் பன்னிரண்டு, பதின்மூன்று நூற்றாண்டு வரை இந்த நிலைதான் நீடித்து இருந்தது. என்பதைத் தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிய முடியும். இந்த நீண்ட நெடிய வரலாற்றில் ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பன் மிக நுணுக்கமாக ஒரு புரட்சியைச் செய்கிறான். "தாய் ஒக்கும் அன்பில்' என்று கூறி அடுத்துத் 'தவம் ஒக்கும்” என்றுங் கூறுவதால் மிகச் சிறந்த உவமைகளைத் தசரதனுக்கு ஏற்றுகிறான் என்பதில் ஐயமில்லை. இவற்றையடுத்து மற்றோர் உவமை கூற விரும்பி அந்த உவமையின் மூலமே ஒரு மாபெரும் புரட்சியைச் செய்து விடுகிறான் கவிஞன். அந்தக் கவிதை வருமாறு: 'வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான், உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால் - செயிர் இலா உலகினில், சென்று, கின்று, வாழ் உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் (177) இந்தப் பாடற் கருத்து பற்றி முன்னரே ஓரளவு கூறியிருப்பினும் மீண்டும் இங்கே சற்று விரிவாகக் காணலாம். மேலோட்டமாகப் பார்க்கின்ற பொழுது உலகிலுள்ள எல்லா உயிர்களையும் தன் உயிர் போல நேசித்துக் காத்தான் என்ற பொருள் விளங்கும். இதனையடுத்து வரும் மூன்று நான்காம் அடிகளில் இக்கருத்தை, வலியுறுத்தத் தொடங்கி ஒரு புதுமையைப் புகுத்துகிறான்