பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 O அ. ச. ஞானசம்பந்தன் கவிஞன். இவ்வடியின் பொருள் குற்றமில்லாத உலகத்தி லுள்ள சேதன, அசேதன உயிர்கள் அனைத்தும் தங்கி வாழ்வதற்குரிய உடம்பாக மன்னன் (தசரதன்) இருந்தான் என்பதாகும். இதில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? இந்த இடத்தில் இயக்கும் கர்த்தா உயிர் என்பதையும் இயங்கும் பணியாள் உடல் என்பதையும் மனத்துள் கொள்ள வேண்டும். இந்தக் கருத்துடன் பின் இரண்டு அடிகளை மறுபடியும் பார்த்தால் உண்மை விளங்கும். தசரத மன்னன் தன் நாட்டில் வாழும் எல்லா உயிர்களும் எதனை விரும்பு கின்றனவோ அதனைச் செய்து முடிக்கும் உடம்பாக (பணியாளனாக) இருக்கிறான். இப்படிப் பார்க்கும் பொழுது தசரதன் தனக்கு என்று, தன்னல அடிப்படையில் எதனையும் செய்வதில்லை என்பதும் உயிர்கள் எதனை விரும்புகின்றனவோ அதனை மட்டும் செய்து முடிப்பவன் என்பதும் விளங்கும். பிற்காலத்தில் மேலை நாடுகளில் குடியாட்சித் தத்துவம் தோன்றியபொழுது, குடியாட்சி என்பது மக்களால், மக்களுக்காகவே, மக்களே நடத்தும் அரசாட்சி ஆகும் என்று விளக்கம் தரப்பட்டது. இந்த விளக்கத்தில் மக்கள் என்பதற்கு பதிலாக உயிர்கள் என்ற சொல்லைப் போட்டால் கம்பன் பாடலின் மூன்று நான்காவது அடிகளின் பொருட்சிறப்பு நன்கு விளங்கும். மேலை நாட்டாரின் இந்தக் குடியாட்சி வழக்கத்தில் ஒரு குறை உண்டு என்பதை மறப்பதற்கில்லை. ஆறறிவு படைத்த மக்கள் மட்டும் குடியாட்சித் தத்துவத்தில் இடம்பெறு கிறார்களே தவிர ஓரறிவு உயிர் முதல் ஐந்தறிவு பெற்றுள்ள விலங்குகள் வரை இத்தத்துவத்தில் விடப்பட்டு விட்டன. ஆனால் ஒன்பதாம் நூற்றாண்டில் குடியாட்சித் தத்துவத்தைக் கற்பனையில் கண்ட கம்பநாடன் இந்த ஐந்து வகை உயிர்களையும் மக்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறான். ஒரறிவு படைத்த மரங்கள் முதலியவை