பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 0 141 நடமாட்டமில்லாத நிலையியல் உயிர்களாகும். இதனைக் கம்பன் நின்று வாழ் உயிர் என்று பேசுகிறான். விலங்கு, பறவை முதலியன ஐந்து அறிவு படைத்தவையேனும் அவை இயங்கும் இயல்புடையன. அவையும் மக்கள் கூட்டத்துள் சேர்க்கப்பட்டு சென்று வாழ் உயிர்கள்’ என்ற தொகுப்பில் இடம் பெறுகின்றன. சென்று நின்று வாழ் உயிர் எல்லாம் உறைவது ஒர் உடம்பும் ஆயினான்’ என்ற அடியின் மூலம் தசரதனாகிய உடம்பு மக்கட் விருப்பத்தை மட்டுமல்லாமல் தாவரங்கள், விலங்குகள் என்பவற்றின் நலனையும் விருப்பத்தையும் கொண்டு செலுத்தும் உடம்பாக உள்ளான் என்று கவிஞன் கூறும் பொழுது இருபத்தோராம் நூற்றாண்டில் B. L___ குடியாட்சிக்காரர்கள் கற்பனை செய்ய முடியாத உயரத்தைக் கவிஞன் எட்டிவிடுகிறான். கம்பநாடன் கண்ட கற்பனை உலகில் அரசன் எப்படியிருக்க வேண்டும் என்பதை மேலே கண்ட சில பாடல்களின் மூலம் அற்புத மாக விளக்கிவிடுகிறான். பாலகாண்டத்தில் நாடு, அரசன், அமைச்சர் என்ற மூன்று பற்றிய கம்பனின் கருத்தோவியம் இடம் பெற்றதை நன்கு அறியமுடிகிறது. - எத்துணைச் சிறந்த அரசனாயினும் எவ்வளவு நல்ல குறிக்கோளுடன் அவன் இருப்பினும் சமுதாயத்தில் ஒன்றி ஊடாடி வாழும்பொழுது நடைமுறையில் பல சிக்கல்கள் தோன்றத்தான் செய்யும். இச்சிக்கல் எதிர்ப்படும் பொழுது அவற்றை அலசி ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவதே சிறந்த அரசியல் எனப்படும். அரசன் என்பவன் தனி மனிதன். அவனுக்கு என்று சில விருப்பு வெறுப்புக்கள் இருக்கத்தான் செய்யும். சமுதாய மக்கள் விருப்பு வெறுப்புக்களுடன் இத்தனி மனிதனுடைய விருப்பு வெறுப்புக்கள் உறழும்பொழுது அதன் முடிவு எதுவாக இருக்கும்? தனி மனிதனாகிய அரசன் கையில் எல்லையற்ற அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. அதிகாரத்துடன் கூடிய அவனுடைய விருப்பு வெறுப்புக்கள் மக்களுடன்,