பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 0 அ. ச. ஞானசம்பந்தன் உறழும்பொழுது எத்தகைய முடிவைத் தரும்? இந்த இரண்டின் உறழ்ச்சியே அரசியல் எனப்படும் இந்த அரசியலின் சிறப்பு, தனித்தன்மை, இன்றியமை யாமை ஆகியவற்றை நன்குணர்ந்து கொண்ட கம்ப நாடன் அரசியற் படலம் என்ற தலைப்பில் இரண்டு படலங்களைப் பாடுகிறான். பால காண்டத்தில் வரும் அரசியற் படலம் கவிஞன் தன் கருத்தாக அரசியலைப் பற்றிக் கூறும் இடமாகும். கிட்கிந்தா காண்டத்தில் வரும் அரசியற் படலம் கவிக் கூற்றாக அமையாமையால் காப்பிய நாயகனான இராகவன் கூற்றாக அமைந் துள்ளது. இந்தப் பகுதி ஈடு இணையற்றவனும் நடையில் நின்று உயர் நாயகனும் ஆகிய இராகவன் சராசரி மனிதனாகிய சுக்கிரீவனுக்கு அரசியல் என்றால் என்ன? என்று எடுத்து விளக்கும் பகுதியாகும். பத்துப் பாடல்களில் (41.22-4131) இராகவன் அரசியல் மாட்சியை சுக்கிரீவனுக்கு எடுத்து விளக்கு கிறான். இந்தப் பத்துப் பாடல்களையும் விரிவாக ஆழ்ந்து சிந்தித்தால் கம்பநாடனின் அரசியல் கருத்து நமக்கு நன்கு விளங்கும். இதனைக் கூறியவன் இராகவனாயினும் கூறப்பட்டவன் சுக்கிரீவன் ஆவான். சுக்கிரீவன் தசரதனைப் போலவோ இராகவனைப் போலவோ மக்கள் நிரம்பிய நாட்டை ஆட்சிச் செய்பவன் அல்லன். விலங்கு களாகிய குரக்கினத்திற்குத் தலைவன். மனிதர்களுக்குரிய சட்டதிட்டங்கள், ஒழுகலாறுகள், வாழ்க்கை முறைகள், குறிக்கோள்கள் ஆகியவை குரங்குச் சமுதாயத்திற்கு செல்லுபடியாகாது என்று வாலி முன்னரே இராமனிடம் கூறியதாகக் (4046- 4047) கம்பன் பாடியுள்ளான். அப்படியிருந்தும் மனிதர்களின் அரசியல் பற்றி சுக்கிரீவ ளிைடம் இராமன் கூறுவதாகக் கம்பன் பாடுவது ஏன்? பல்லவப் பேரரசு வீழ்ச்சி அடைந்து சோழப் பேரரசு தொடங்குகின்ற நிலையில் இம் ம ண் ணி ைட த்