பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 0 143 தோன்றியவன் கம்பநாடன். சோழப் பேரரசு தமிழரசர் களின் குடையின் கீழ் அமையப் போவதாகும். ஆகவே அந்த அரசு எப்படியமைய வேண்டும் என்பதை ஒரு வரைபடம் மூலம் விளக்க விரும்புகிறான் கம்பநாடன். அதற்குரிய வாய்ப்பான இடம் கிட்கிந்தா காண்டமாகும். பல்லவப் பேரரசு வீழ்ந்தது போல வாலி வீழ்ந்து விட்டான். சோழப் பேரரசு தலையெடுப்பது போல, சுக்கிரீவன் ஆட்சி தொடங்குகிறான். இந்த நிலையில் புதிதாக வரும் அரசன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதைக் கூறுவது போல இப்பகுதியை அமைத்து விட்டான். இதைச் சற்று விரிவாகக் காண்பது பயனுடையது ஆகும். அரசியல் நெறி கூறப் புகுந்த இராகவன் திருக்குறளின் பல அதிகாரங்களை உள்ளடக்கி ஒரு பாடலாக முதற் பாடலில் வெளிப்படுத்திக் கூறுகின்றான்: வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத் தொழில் மறவரோடும் தூய்மை சால் புணர்ச்சி பேணி,துகள் அறு தொழிலை ஆகி - சேய்மையோடு அணிமை இன்றி,தேவரின் தெரிய கிற்றி (4.122) இப்பாடலின் பொருள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். ஒர் அரசனுக்கு அமைச்சர்கள் கண் போன்றவர்கள். மந்திரக் கிழவர்கள் என்ற பெயரை இவர்களுக்கு வழங்கும் பொழுது கம்பன் இருபொருள்படக் கூறுகிறான். அரசனின் மந்திராலோசனைக்கு உரியவர்கள் என்பது ஒரு பொருள். மந்திரம் என்ற சொல்லுக்கு இரகசியம் என்ற ஒரு பொருளுமுண்டு. எனவே இந்த அமைச்சர்கள் இரகசியத்தைக் காக்கின்றவர்கள் என்ற பொருளும் இச் சொல்லில் அடங்கியிருக்கக் காணலாம். இன்று கூட அமைச்சர் பதவியில் நியமிக்கப்படுகின்றவர்கள் இரகசியக்