பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 0 அ. ச. ஞானசம்பந்தன் காப்புப் பிரமாணம் என்ற ஒன்றை எடுத்துக் கொள்வதை நாம் அறிவோம். இந்த மந்திரக் கிழவர்களுக்கு மற்றோர் இன்றியமையாத பண்பையும் இராகவன் முதலில் கூறுகிறான்: வாய்மை சால் அறிவு என்பதாகும் அது. அமைச்சர்களுக்கு துண்மையான அறிவு தேவையென்பதை யாவரும் அறிவர். ஆனால் நுண்மையான அறிவு என்பது இருபுறமும் கூர்மையான வாள் போன்றதாகும். இந்தக் கூர்மையான அறிவு எதிர்காலத்தைக் கணித்தறியப் பயன்படுவதாகும். இவ்வாறு கணித்துக் கண்ட செய்தி களைக் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பகைவர்களிடம் தெரிவிக்கின்ற அமைச்சர்களாக இருந்துவிட்டால் என்ன செய்வது? இதைவிடப் பெரிய ஆபத்து வேறொன்றும் இல்லை. இன்றுகூட சில நாடுகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுவதையறிய முடிகிறது. இதைத் தடுப்பதற்கு வாய்மை ஒன்றினால்தான் முடியும். சிறந்த அறிவுடைய அமைச்சர்கள் தம் அரசனுக்குப் பயன்பட வேண்டுமானால் அவர்களுடைய அறிவு வாய்மையுடன் கலந்ததாக இருக்க வேண்டும். இப்படிக் கலப்பதிலும் அரைகுறையாகக் கலந்திருந்தால் பயனில்லை. ஒரு சமயம் இல்லாவிட்டாலும் மற்றொரு சமயம் இவர்கள் மன்னனை ஏமாற்றிவிடுவார்கள். ஆகவே வாய்மை சால்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது மூலம் வாய்மை நிறைந்த, அதாவது வாய்மையினின்றும் பிறழாத அறிவோடு கூடிய அமைச்சர் என்று பேசுகிறான் கம்ப நாடன். பாடலின் முதலடியில் அறநிலை பிறழாத அறிவு நிரம்பிய அமைச்சர்களின் துணை வேண்டும் என்று கூறிய கவிஞன் இரண்டாவது அடியில் அரசனுக்கு மிகத். தேவையான மற்றோர் உறுப்பையும் கூறுகிறான். படைவீரர்கள் படைத் தலைவர்கள் என்பவர்கள் எத்தகையவர்களாக இருக்க வேண்டும் என்று கூற வந்த கவிஞன் அவர்கட்கும் இரண்டு இயல்புகளைக் கற்பிக் கிறான். நல்லொழுக்கம் என்று கூறாது தீமையினின்று நீங்கிய ஒழுக்கம் என்று கூறுவது சிந்திக்கத் தக்கது. தம்