பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் C 145 தலைவனாகிய அரசனுக்குத் தீமை புரியாத வாழ்க்கை முறை உடையவர்களாக இருத்தல் வேண்டும். படை வீரர்கள் செய்யும் செயல்கள் பிறர், இவை நல்லொழுக்க மல்ல' என்று கூறக் கூடியதாகக் கூட இருக்கலாம். அச் செயல்கள் தம் அரசனுக்கு நலம் பயக்க வேண்டுமென்பதே குறிக்கோளாகும். இனி, தீமை தீர்ந்த இவ்வொழுக்கத் தோடு திறத்தொழில் மறவர்களாக அவர்கள் இருத்தல் வேண்டும். அதாவது போர்க்கலையில் திறமுடையவர் களாக இருத்தல் வேண்டும். அத்தகைய படைஞர், படைத்தலைவர், வேண்டுமெனக் கவிஞன் கூறுவதைச் சற்று நின்று கவனிக்க வேண்டும். வாய்மை சால் அமைச்சரை முதலில் கூறி தீது தீர் படைஞரை இரண்டா வதாகக் கூறியதன் நோக்கமென்ன? முதலில் குறிப்பிடப் பட்டவர்கள் அறிவு ஜீவிகள் (Intellectuals) எனப்படு பவர்கள். இரண்டாவது பேசப்பட்டவர்கள் உடல் வலிமையை நம்பி வாழ்பவர்கள். ஓர் அரசனுக்கு இவ்விரு வகையினரும் இன்றியமையாத உறுப்புக்களாவர். என்றாலும் உடல் வலிமையை விட அறிவுப் பலன் முக்கியமானதாதலின் அதனை முதலில் கூறினார். ஒரு சமுதாயத்தின் தலைவனாகிய அரசன் மேலே சொல்லப்பட்ட இரு வகையினரை மட்டும் வைத்துக் கொண்டால் போதுமென்று நினைப்பது தவறு. அன்றாட வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களோடும் பழக வேண்டிய கடப்பாடுயுடையவன் அரசன். அப்படிப்பட்ட ம க் க ளோ டு பழகும்போது எத்தகையவர்களிடம் நெருங்கிப் பழகுவது என்ற வினாத் தோன்றும். அதற்கு விடையாக மூன்றாவது அடியின் முதற் பகுதியில் மனம், மொழி, மெய்களில் தூய்மை உடையவர்களோடு ஏற்படும் புணர்ச்சியை பேணிக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கூ ால் தூய்மையற்றவர்களைக் காண நேர்ந்தால் அவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு அவர்களோடு மேலும் தொடர்பு கொள்ளாமல் அப்படியே விட்டு விட த-10,