பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 0 அ. ச. ஞானசம்பந்தன் வேண்டும் என்கிறான். அடுத்துச் சொல்லப்பட்டது மிக முக்கியமானதாகும். துகள் அறு தொழிலை ஆகிகுற்றமற்ற தொழிலை செய்து என்பது இதன் நேரடிப் பொருளாகும். தொழிலில் துகள் உடை தொழிலென்றும், துகள் அறு தொழிலென்றும் இரு வகையுண்டா? ஒருவன் தன் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதால் பிறர் பாதிக்கப்படு வார்களா என்பதை ஆராயாமல் செய்வது துகள் உடை தொழிலாகும். பல பொறுப்புக்களையுடைய அரசன் சில காரியங்களைச் செய்யும் பொழுது அதனால் சிலர் பாதிக்கப்படவும் கூடும். அப்படியானால் என்ன செய்வது? பலருடைய நன்மை கருதி ஒன்றைச் செய்யும் பொழுது ஒரு சிலர் அதனால் பாதிக்கப்பட்டால் அரசன் அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. சுயநலமில் லாமல் பிறர் நலங்கருதிச் செய்யப்படும் எத்தொழிலும் துகள் அறு தொழிலேயாகும். ஒரு சிலர் பாதிக்கப்படுவ ரேனும் அப்பாதிப்பை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டுமென்பதை அறிவுறுத்த, துகள் அறு தொழில் என்று கவிஞன் கூறுகிறான். துகளை அறுத்தல் என்பதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாகப் பாதிப்பு ஏற்படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பொருளாயிற்று. இதனைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைக் காணலாம். வளர்ந்து வரும் நகரத்தில் ஒரு புதிய சாலை போடுவதாக வைத்துக்கொள்வோம். அந்தச் சாலையினால் பல்லாயிர வர் பலகாலம் பயனடைவர். ஆனால் அச்சாலை போடும் வழியில் தனியொருவருடைய வீடு இருந்துவிட்டால் என்ன செய்வது? அவருக்குரிய இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்துவிட்டு வீட்டை இடிப்பது ஆட்சியாளரின் கடமையாகும். இதனையடுத்து வரும் நான்காவது அடி அதிகாரத்திலுள்ள அனைவருக்கும் அன்றும் இன்றும் என்றும் மிகத் தேவையான ஒரு பண்பாகும். அதிகாரத் தில் உள்ளவர்கள் ஒருவருடன் நெருங்கிப் பழகினால் என்ன தவறு என்று நினைக்கலாம். அவ்வாறு