பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 147 பழகுபவர்கள் தம்முடைய அந்த நெருக்கத்தைப் பயன் படுத்தித் தம் செல்வாக்கை விலை கூறி விற்பது இன்றும் நாம் காண்கின்ற ஒன்றாகும். இதன் மறுதலையாக யாரையுமே நெருங்கவிடாமல் இருப்பது நலமோ என்றால் அதுவும் தவறேயாகும். நல்லவர்கள், பண்பாளர்கள், மக்களின் குறைகளை எடுத்துச் சொல்பவர்கள் ஆகிய இத் திறத்தார் அரசனுக்கு நலன் செய்பவர்கள் ஆவார்கள். யாரையும் நெருங்க விடவில்லையென்றால் இவர்களால் பெறக் கூடிய நற்பயனும் இல்லாமல் போய்விடும். எனவே தான் அகலாது அணுகாது வாழ்க என்று அரசனுக்கு நெறிமுறை கூறினான் கம்பன். இதற்கடுத்த படியாக வரும் தேவரின் தெரிய நிற்றி என்ற தொடர் சிந்திக்கத் தக்கது. தேவர்கள் தாமாக விரும்பினால் ஏனைய உலகங்களுக்குச் செல்ல முடியுமே தவிர ஏனைய உலகங் களில் உள்ளவர்கள் தேவர்களைச் சென்று அடைய முடியாது. இதனை அனைவரும் அறிவர். ஆகவே தேவரின் தெரிய என்ற சொல்லினால் நீ தேவன் என்பதை ஏனையோர் தெரிந்து கொள்ளும்படி நிற்பாயாக என்கிறான் கவிஞன். இந்த ஒரு பாடலில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருவனுக்கு தேவையான அத்தனைப் பண்புகளும் கூறப்பெற்றுவிட்டன. இரண்டாவது பாடலில் (4123) அதிகாரத்தில் உள்ள ஒருவனுக்கு மிக இன்றியமையாது வேண்டப்படும் ஒர் இயல்பு பேசப்படுகிறது. அதிகாரம் பெற்ற உடனேயே அதனைப் பெறமுடியாமல் போனவர்களின் பொறாமை, சூழ்ச்சி முதலியவற்றையுடைய பகைவர்கள் தோன்றி விடுவார்கள். இப் பகைவர்கள் பலதரப்படுபவர்கள் ஆவர். அவர்கள் ஆழ் மனத்திலுள்ள பொறாமை, பகைமை என்பவற்றை மறைத்துக் கொண்டு போலியாக நட்பு பாராட்டுவர். அரசன் கூர்த்த மதியினால் இவர் களுடைய ஆழ் மனத்திலுள்ள பகைமையை அறிந்து கொள்ள வேண்டும். அறிந்துகொண்டத்ை வெளிக்.