பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ) அ. ச. ஞானசம்பந்தன் காட்டாமல் அவர்களிடம் இன்முகங்காட்டி இனிமை யாகப் பேச வேண்டும். அவ்வாறு செய்வதனால் பகைவர்கள் தம் பகைமையை வளர்க்க முடியாமல் செய்துவிடலாம். மூன்றாவது பாடலில் (4.124) உலக நடைமுறை நியதி ஒன்றைக் கவிஞன் கூறுகிறான். முற்றும் துறந்த முனிவர்களிடம் பிறர் விரும்பக் கூடிய செல்வம் எதுவுமே இல்லையானாலும் அவர்களிடத்துங்கூட பழகுகின்ற வர்கள் நண்பர், பகைவர், நொதுமலர் என்ற மூன்று. பிரிவினர் ஆவர். அவர்கள் கதியே இப்படியென்றால் பெருஞ்செல்வத்தைப் பெற்றுள்ள உன்னைச் சுற்றியும் இந்த மூவகையினரும் இருப்பர் என்பதை மறந்து விடாதே, என்று இராகவன் சுக்கிரீவனுக்கு அறிவுறுத்து கிறான். இதற்கடுத்த பாடலில் நண்பர், பகைவர், நொதுமலர் ஆகிய மூவரிடத்தும் ஒத்த மனப்பான்மை, யோடு செய்ய வேண்டுவனவற்றைச் செய்ய வேண்டும். தன்னைக் கடிந்து பேசியவர்களையும் இனிய சொற்களால் கவர வேண்டும். எப்பொழுதும் உண்மை. பேச வேண்டும். தன்பால் உள்ளவற்றை ஈதலோடு பிறர் பொருள் நச்சாது இருத்தல் வேண்டும் என்பன போன்ற அறங்கள் பேசப்படுகின்றன. - அடுத்த பாடலில் அதிகாரத்திலுள்ளவர்கள் அன்றும் இன்றும் என்றும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய நியதி ஒன்றைக் கூறுகிறார் அதிகாரம் கையிலிருக்கின்ற காரணத்தால் பிறரைத் தாழ்வாக மதித்துக் கொடுமை, செய்து விடாதே. அச்சிறியரால் மாபெருந் துன்பத்தை, அடைய நேரிடும் என்பதை மறவாதே! கூனியால் யான் இப்பொழுது அடைந்துள்ள நிலையை அறிவாயாக என்று. மனம் பதியுமாறு பேசுகிறான் இராகவன். - மற்றோர் பாடலில் உன் கீழ் வாழும் மக்கள் உன்னை அரசன் என்று நினைத்து அஞ்சி ஒதுங்காமல் தம்முடைய