பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 0 149 தாய் என்று அவர்கள் உன்னைப் போற்றி அன்பு காட்டுமாறு நடந்து கொள்வாயாக. அரசனாதலின் தண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படின் அப்பொழுதும் உன் விருப்பு வெறுப்புக்கு இடங்கொடாமல் குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவாயாக என்ற மிகத் தேவை யான ஒரு பண்பைப் பேசுகிறான் இராகவன். அதிகாரத்தி லுள்ளவர்கள், பிறரைத் தண்டிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுந்தவர்களாக இருத்தல் கண்கூடு. அது கூடாதென்று மறுக்கிறான் இராகவன். - இறுதியாக அறத்தின் அடிப்படையில்தான் செல்வம் சேருமே தவிர பாவத்தின் அடிப்படையில் அது சேராது என்றும், மேலோர் வகுத்த சுருதி, யுக்தி, அனுமானம் என்ற மூன்று பிரமாணங்களாலும் விரிவாகக் கூறி முடிக் கிறான். அரசியல் செம்மையாக இருக்க வேண்டுமானால் அரசன் செம்மையாக இருப்பதுடன் அவனை அண்டி வாழும் அமைச்சர் முதலானவர்களும் செம்மை உடைய வர்களாக இருக்க வேண்டும் என்று இராகவன் கூறிய நியதிகள் எக்காலத்திற்கும், முடியாட்சிக் காலமாயினும் குடியாட்சிக் காலமாயினும் பொருந்தும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். - இராகவன் கூற்றாக இந்நெடியவுரை சுக்கிரீவனுக்குச் சொல்லப்பட்டதேனும் கம்பன் கருத்தில் அரசு, அரசியல் என்ற இரண்டும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அவன் கூறுகிறான் என்பதை இன்று நாம் அறிந்து கொள்ளச் சிறந்த வாய்ப்பளிக்கின்ற பாடல்கள் ஆகும். இவையெல்லாவற்றையும் விட மாபெரும் அரசன் ஒருவனுக்குரிய நீதி ஒன்றைப் பேசுகிறான் கவிஞன். அந்த நீதியை சுக்கிரீவனிடம் சொன்னால் பொருத்தமுடைய தாகாது. எனவே அதற்குரிய நிலைக்களத்தைத் தேடியலைந்த கம்பனுக்குச் சிறந்த இடமொன்று கிடைக் கிறது. சக்கரவர்த்தித் திருமகனாகிய இராமனுக்கு முடி