பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 0 அ. ச. ஞானசம்பந்தன் சூட்ட நாள் குறித்தாயிற்று. பொழுது விடிந்தவுடன் முடி சூட்டப்பட வேண்டும். இந்த நிலையில் இராகவனுக்கு வசிட்டன் அறிவுரை கூறுகிறான். மறுநாட்காலை இராமன் ஒரு பெரிய அரசன் ஆகப்போகிறான்; அதைத் தொடர்ந்து அதிகாரமும் படை பலமும் இராமனைத் தேடி வரப் போகின்றன. இளமைத் துடிப்பில் படை பலத்தைப் பயன்படுத்தி இராகவன் போரில் இறங்கி விடலாமல்லவா. அது கருதி மிக இன்றியமையாத அரசியல் நுணுக்கமொன்றை வசிட்டன் கூறுகிறான்: யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது' (1419). ஆழ்ந்த அறிவுடையோர்க்கன்றி ஏனையோரிடம் இதைச் சொல்லிப் பயனில்லை. அதிகாரம் கைக்கு வந்தவுடன் தான் மிகப் பெரியவன் என்றும் ஏனையோரினும் தான் வேறுபட்டவன் என்றும் தன் புகழை எல்லோரும் பாட வேண்டும் என்றும் நினைப்பது மனித இயற்கை. இந்நிலை யைத் தவிர்ப்பது என்பது மிகக் கடினமான காரியம். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் பிறிதோர் இடத்தில் கம்பநாடன், - - '೨ipಣಿ நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும் பெறல் அருந்திருப் பெற்றபின், சிந்தனை பிறிது ஆம்' (1476). அறவழி நின்று அருளோடு உடிய மனத்தையும் பெற்று மாபெருந் தவங்கள் செய்து முற்றுந் துறந்த முனிவர் களாயினும் எதிர்பாராமல் பெறுதற்கரிய செல்வத்தைப் பெற்றால் அவர்கள் அறிவு மாறிவிடுவது இயல்பு என்று கம்பன் கூறுவதை நினைவில் கொண்டால் வசிட்டன் ஏன் இராமனுக்கு இவ்வாறு உபதேசம் செய்தான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.