பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O. 151 மனிதன் புகழுக்கு அடிமையானவன், ஆசைப் பட்டவன். எனவே புகழ் பெறுவதற்குத் தன் ஆற்றலைப் பயன்படுத்தி பிறரை அடக்க முற்படுவது அரசர்க்குரிய இயல்பாகும். இந்த இயல்பை மனத்துக் கொண்ட வசிட்டன் இராகவனுக்குப் பொது அறத்தை உபதேசிப்பது போல இப்பொழுது பேசுகிறான். ஒரு மன்னன் யாருடனும் பகை கொள்ளக் கூடாது என்ற முடிவிற்கு வந்துவிட்டால் அவன் போர் புரிய வேண்டிய இன்றியமையாமை ஏற்படாது. அப்படியானால் அம் மன்னன் பெரும் புகழையடைய வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவது இயற்கை. அந்த எண்ணம் தவறானது என்று வசிட்டன் அறிவுறுத்துவ துடன் போரை நிறுத்திவிட்டதனால் புகழ் இல்லாமல் போய்விடும் என்று நினைக்க வேண்டாம். புகழ் வளர்ந்து கொண்டே செல்லும் என்று கூறுகிறான். - இத்தகைய ஒரு புதுமையான கருத்தை இதற்கு முன்னும் பின்னும் எந்தப் புலவனும், எந்தக் காப்பியப் புலவனும் சொல்லியதில்லையென்பதைத் தமிழ் இலக்கிய வல்லுநர்கள் நன்கு அறிவர். அப்படியானால் கம்பநாடன் இக்கருத்தை எங்கே பெற்றான்? ஒருவன் போரை நிறுத்திய பின் அவனுக்குப் புகழ் வளர்ந்தது என்றால் அவன் யார்? என்ற வினா தோன்றுவது இயல்பு. உலக வரலாற்றிலேயே போரை நிறுத்திப் புகழின் உச்சநிலையை அடைந்தவன் ஒரேயொருவன்தான் உண்டு. அப் பெரியவன் தோன்றியதும் இந்த இந்திய மண்ணில்தான். அவனே அசோகச் சக்கரவர்த்தி என்பதை உலகம் நன்கறியும். அலெக்சான்டர், செங்கிஷ்கான் போன்ற வர்கள் புகழ்வெறி கொண்டு மாபெரும் போர் செய்து புகழையடைந்ததாக இறுமாந்து நின்றனர். ஆனால் அவர்கள் மடிந்த உடனேயே அவர்கள் அடைந்த புகழும். மடிந்துவிட்டது. இந்த 2500 ஆண்டுகளாகப் போரை நிறுத்தி அதனால் மங்காத புகழையடைந்த ஒருவன்