பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 அ. ச. ஞானசம்பந்தன்


கோசலநாடு முழுவதையும் பிழம்பாக நோக்குபவர் கட்குத் தோன்றும் [1] இத்தகையது என்பதை வருணனை கூறுமுகமாகவே கவிஞன் கூறி விட்டான். இந்த இடத்தில் கவிஞன் கையாளும் உவமை, இயல்புக்கும் மரபுக்கும் ஒத்துக் கற்போர்க்கு இன்பம் பயப்பதாகும். கொண்டல் முழங்கின், மயில் ஆடும்; குவளை மலர்ந்திருக்கும் மாலைப்போதில் தாமரை குவிந்துவிடும். இந்த இயல்பு பிறழாமல் முறைப்படுத்தும் கவிஞன் திறன் துய்ப்பார்க்குச் சுவை ஊட்டுமன்றோ?

வயற்செழிப்பு

இனி அடுத்து நெருங்கிச் சென்று நாட்டினுள் நுழைந்து பார்க்கலாம். இந்த விளைநிலங்களில் விளைந்துள்ள நெல்லைப் பார்த்து வியப்பை அடைகிறீர்களா? ‘இவ்வளவு செழிப்பாக வளர்வதற்கு என்ன உரம் போடுகிறார்கள்!’ என்றா வியப்படைகின்றீர்கள்? இன்னுஞ் சிறிது தூரம் சென்றால், செழிப்பின் காரணம் நன்கு தெரியும். அதோ கரிய நிறத்துடன் தூரத்தில் வருகின்றனவே, அவை என்னவென்பது தெரிகிறதா? நீருண்ட மேகமோ, யானையோ! என்று ஐயப் படுகிறீர்கள் அல்லவா? அவை பால் கறக்கும் நல்ல எருமைகளே. இதோ பக்கத்திலும் வந்துவிட்டன; நன்றாகக் காணுங்கள். இவற்றின் மடியிலிருந்து பால் ஒழுகிக் கொண்டேயிருப்பது தெரிகிறதா? நல்ல வளமை காரணமாகவும் கன்றை நினைப்பதனாலும் இவற்றின் பால் ஒழுகுகிறது. வழியில் ஒழுகும் பால் முழுதும் இதோ நெல் வயல்களில் சென்று பாய்கின்றது. இப்பொழுது தெரிகிறதா வயற் செழிப்பின் காரணம்? வெற்றுநீர் வளத்தால் மட்டும் அன்று இப்பயிர்கள் தழைப்பது; பால் வளத்தாலுங்கூட என்பதைக் கம்பநாடன் கூறுகிறான்.1 Total impression1 Total impression

  1. முழுத்தோற்றம்