பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 0 அ. ச. ஞானசம்பந்தன் அசோகனேயாவான். இந்திய மண்ணின் வரலாற்றை நன்கறிந்த கம்பநாடன் அசோகனை மனத்திற்கொண்டு இந்த இரண்டு வரிகளையும் பாடினான் என்று கொள்வது தவறில்லை. உலக வரலாற்றில் போரை நிறுத்திப் புகழ் கொண்டவன் அசோகன் ஒருவனேயாவது போல உலக இலக்கிய வரலாற்றில் போரொடுங்கும் புகழ் ஒடுங்காது’ என்று பாடியவன் கம்பன் ஒருவனேயாவான். கம்பனுடைய இராமகாதையில் கோசலம், கிட்கிந்தை, இலங்கை என்ற மூன்று நாடுகள் பேசப்படுகின்றன. இவற்றை முறையே தசரதன், வாலி, இராவணன் என்போர் ஆட்சி செய்கின்றனர். இம்மூவரின் ஆட்சியின் கீழும் அவர்களால் ஆட்சி செய்யப்பெற்ற குடிமக்கள் எவ்வாறு இருந்தனர் என்பதைக் கவிஞன் சுட்டிச் செல்கிறான். கோசலத்தைப் பொறுத்தமட்டில் மன்ன னாகிய தசரதன் அறிஞன் ஒம்பும் ஒர் செய்' எனக் குடிமக்களைக் காக்கின்றான் ஆதலால் கோசல மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. நாட்டுச் சிறப்பைப் பாடுமிடத்து இதை ஒரளவு விரிவாகவே கம்பன் பாடுகிறான். கிட்கிந்தையைப் பொறுத்தமட்டில் மாபெரும் வல்லமை படைத்தவனும் எல்லையற்ற கடவுள் பக்தியுடையவனும் இராவணனை யும் வெல்லும் ஆற்றல் படைத்தவனாகிய வாலியின் ஆட்சியில் அவனுடைய குடிமக்கள் எவ்வாறு இருந்திருப் பார்கள் என்பதைக் கவிஞன் எடுத்துக் கூறவில்லை. ஆனால் வாலியைக் கொன்ற பிறகு சுக்கிரீவனுக்குப் பட்டங்கட்டி வேண்டுமான அறவுரைகள் கூறி அவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புகிறான். அவன் சென்ற பிறகு சுக்கிரீவனின் அமைச்சனாகிய அனுமனை அருகில் அழைத்து மிக நுணுக்கமான ஓர் அரசியல் விவகாரத்தை அனுமனிடம் பேசுகிறான் இராகவன். -