பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O. 153 நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதிநின்ற வரம்பு இலாததனை, மற்றும் ஓர் தலைமகன் வலிதின் கொண்டால். அரும்புவ, நலனும் தீங்கும்; ஆகலின், ஐய! கின்போல் பெரும்பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது அம்மா! இப்பாடலின் முதலடி சிந்திப்பதற்குரியது. நிரம்பி னான் என்ற சொல்லினால் வாலி அனைத்து நற்பண்பு களும் நிரம்பப் பெற்றவன் என்பதை இராகவனே ஏற்றுக்கொண்டு பேசுகிறான். ஒருவன் என்ற சொல்லை யாரோ ஒருவன் என்ற பொதுப் பெயர் என்று கொள்ளாமல் ஒப்பற்றவன் என்ற சிறப்புப் பொருளை இங்கே கொள்ள வேண்டும். காரணம் அடுத்து வருகின்ற நிறையரசு என்ற சொல் இவ்வாறு பொருள் கொள்ளா விட்டால் பொருட்சிறப்பு அற்றதாகிவிடும். நிறையரசு என்றால் மக்கள் வளம் உட்பட அனைத்து வளங்களும் நிரம்பிய அரசு என்பதே பொருளாகும். நிறையரசு என்பது வினைத்தொகையாதலின் இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலங்கட்கும் உரியதாய் கிட்கிந்தை யின் வளத்தை உணர்த்தும் சொல்லாய் அமைகிறது. பன்னெடுங்காலமாகக் கிட்கிந்தையை ஆட்சி செய்த வாலி சில மணி நேரங்களுக்கு முன்னர்த்தான் வீடுபேற்றை யடைந்தான். அவனால் ஆட்சி செய்யப் பெற்ற நாட்டை நிறையரசு என்று இராமனே ஒத்துக் கொள்கிறான். அன்றியும் தன்னால் கொல்லப்பட்ட வாலியைச் சகல நற்பண்புகளும் நிறைந்தவனும் ஒப்பற்றவனும் என்ற பொருளில் நிரம்பினான் ஒருவன் காத்த நிறையரசு’ என்று பேசுகிறான் என்றால் வாலியின் ஆட்சிச் சிறப்பை இராமனே ஏற்றுக்கொண்டு புகழ்கிறான் என்பது வெளிப்படை. இப்பாடலுக்கு இவ்வாறு பொருள் கொள்ள விரும்பாமல் இது ஏதோ ஒரு பொதுக்கருத்தை