பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 O அ. ச. ஞானசம்பந்தன் எடுத்துக் கூறியதாகும் என்று பலரும் உரை கண்டனர். உண்மையில் வாலியையும் சுக்கிரீவனையும் ஒப்பிட்டுப் பார்த்த இராகவன் வாலியின் சிறப்புக்களுக்கு எதிரே சுக்கிரீவன் இருக்கமாட்டான் என்பதை உணர்கிறான். தான் பழகிய ஒருசில நாட்களுக்குள்ளாகவே இந்த வேறு பாட்டையறிய முடிகிறது என்றால் வாலியின் ஆட்சியில் மகிழ்ச்சியோடு பலகாலம் வாழ்ந்த மக்கள் சுக்கிரீவன் ஆட்சியை ஏற்றுக் கொள்ளுவது கடினம் என்பதை அறிகிறான் இராகவன். நுண்மாண் நுழை புலம் உடைய அனுமனிடத்தில் அவனுடைய தலைவனாகிய சுக்கிரீவ லுடைய குறைபாடுகளை நேரிடையாக எடுத்துச் சொல்லாமல் வாலியைப் புகழ்வதன் மூலம் சுக்கிரீவனின் குறைபாட்டை அனுமன் அறிந்து கொள்ளுமாறு செய்கிறான். நிறையரசில் வாழ்ந்த மக்கள், அவ்வரசை வலிதில் பற்றிக்கொண்ட சுக்கிரீவன் அரசை பழைய அரசோடு ஒப்பிட்டுப் பாராமல் இரார். எனவே அவர்கள் மனத்தில் வெறுப்புணர்ச்சி தோன்றாமல் உன் அரசனாகிய சுக்கிரீவனைக் காப்பது அமைச்சனாகிய உன்னுடைய கடமை என்ற அறவுரையை அனுமனுக்குக் கூறுகிறான் இராகவன். குரங்குகள் வாழும் நாடாயினும், அந்த நாட்டை ஒரு குரக்கரசன் ஆட்சி செய்தான் என்றாலும் அவனுடைய ஆட்சியை நிறையரசு என்றும் அவனை நிரம்பினான் ஒருவன் என்றும் சக்கரவர்த்தித் திருமகனைக் கூற வைத்து ஒரேவரியில் கிட்கிந்தை அரசியலை நமக்கு. உணர்த்திவிடுகிறான் கம்பன். * .. மூன்றாவதாக உள்ள இலங்கையரசு அரசியல்; மக்கள் ஆகியவை பற்றி மிக விரிவாகப் பாடுகிறான். கவிஞன். அப்பகுதி முழுவதையும் இங்கு எடுத்துக் கூற இடமில்லையென்றாலும் ஒரே ஒரு பகுதியை மட்டும் சிந்திப்பது நலம் பயக்கும். இந்திரப் பெரும்பதம்' என்று கும்பகர்ணனால் குறிக்கப்படும் இலங்கையரசில் மக்கள்