பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 0 155 எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இரண்டே அடிகளில் கவிஞன் கூறுகிறான். அந்த இரண்டு அடிகளும் கவிஞன் கூற்றாக அல்லாமல் அனுமன் கூற்றாக அமைவது சாலச் சிறந்ததாகும். இராவணனைப் பற்றி மிக மிக மோசமான எண்ணங்கொண்டவன் அனுமன். இராகவனின் தூதனும் ஆவான். அத்தகைய மனப்பான்மையுடைய அனுமன் முதன்முதலாக இலங்கையையும் அதன் மக்களையும் பார்த்து வியந்து இரண்டு அடிகளில் இரண்டு பாராட்டுக் களைத் தெரிவிக்கிறான். இலங்கை நகர் முழுவதையும் ஒரு கண்ணோட்டமிட்ட அனுமன் இந்த நகரத்தோடு தேவருலகத்தை ஒப்பிட்டால் தேவருலகம் வெறுக்கத் தகுந்த நரகலோகம் ஆகிவிடும் என்ற பொருளில், "கரகம் ஒக்குமால் கல்நெடும் துறக்கம்இந் நகர்க்கு (4848) என்று பேசுகிறான். அடுத்தபடியாக அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றிப் பேசத் தொடங்கிய அனுமன், அளிக்குக் தேறலுண்டு ஆடுகர் பாடுகர் ஆகிக் களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன்" என்று பேசுகிறான். மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது இலங்கை மக்கள் அனைவரும் களிப்புடன் வாழ்ந்தனர்; கவலைப்படுபவர் ஒருவர் கூட இல்லை என்ற பொருளைத் தருகிறது, இவ்வடிகள். இராவணனைப் பொறுத்தமட்டில் பிறர் மனை நயத்தல் என்ற குற்றம் புரிந்தவனாயினும் அவனுடைய நாட்டு மக்களைக் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான் என்பதை இவ்வடிகள் உணர்த்தும். ஆழ்ந்து நோக்கினால், களிக்கின்றார் என்ற சொல்லுக்கு வேறோர் பொருள் இருப்பதையும் அறிய முடியும். கம்பநாடன் காலத்தில் களித்தல் என்ற சொல்லிற்கு மகிழ்தல் என்ற