பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 O அ. ச. ஞானசம்பந்தன் பொருளில்லை. குடித்துவிட்டுத் தம்மை மறந்து இருப்பவர் களையே களிப்புடன் இருப்பவர்கள் என்று சொல்வது மரபு. இலங்கையிலுள்ளவர்கள் தம் அரசனின் அடாத செயலைக் கண்டு அதைத் தட்டிக் கேட்க முடியாமையான் மனத்தில் பெருங்கவலை கொண்டு அக்கவலையை மறக்கத் தேறல் மாந்திக் களித்தார்கள் என்ற பொருளும் தொனிக்கும்படியாகக் கவிஞன் பாடியுள்ளான். அரசியலைப் பற்றி விரிவாகப் பாடுவது கம்பனின் நோக்கமன்று என்றாலும் உலக வாழ்க்கையில் மிகப் பெரிய உறுப்பாக இருக்கின்ற அரசு, அரசியல் என்பவைப் பற்றி அவன் என்ன நினைந்தான் என்பதையறிய அவனுடைய காப்பியம் உதவுகிறது.