பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 7

 ஈர நீர்படிந்து இங்கிலத் தேசில
கார்கள் என்ன வருங்கரு மேதிகள்
ஊரில் கின்ற கன்று உள்ளிட உண்முலைத்
தாரை கொள்ளத் தழைப்பன சாலியே

(கம்பன்- 56)

(கார்கள்- மேகங்கள், மேதிகள்- எருமைகள், உள்ளிட- நினைப்பதால், தாரை கொள்ள- பால் தாரையாக ஒழுக.)

வண்டிகள்

இந்தப் பெரிய சாலையில் வருகின்ற இத்தனை வண்டிகளும் என்னவென்று நினைக்கிறீர்களா?

இவை அனைத்தும் விளைபொருள்களை ஏற்றிச் செல்பவையேயாகும். இவை விளைபொருட் செல்வம் மட்டுமே கொண்டு செல்கின்றன என்றா கூறினேன்? அன்று; ஒரு நாட்டில் மூலப் பொருள்கள் வேண்டு மல்லவா? இதோ அவையும் நிறைந்துள்ளன. “நிலஞ் சுரக்கும் நிறைவளத்தையும், நன்மணிப் பிலஞ் சுரக்கும் பெறுதற்கரியவற்றையும்” (69) ஏற்றிக்கொண்டு, “நெறிகளும் புதையப் பண்டிநிறைத்து மண் நெளிய ஊர்வார்கள்” (51) என்று கவிஞன் கூறுவதைக் கேட்டீர்களா? அவை என்ன விளை பொருள்கள் என்பதை அறிய ஆவல் உண்டாகிறதா? இதோ! “எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும், கொள்ளும் வண்டிகளில் வருகின்றன,”என்றும், “நெற்குவைகள் செய்வார், வறியவர்க்குதவி, மிக்க விருந்து உண மனையின் உய்ப்பான்” (51) வண்டிகளிலும் ஏற்றி அனுப்புகின்றன ரென்றும் கவிஞன் கூறுகின்றான்.