பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 அ. ச. ஞானசம்பந்தன்


விலங்கின வாழ்க்கை

இவ்வளவு இயற்கை வளமுடைய நாட்டில் விலங்குகள் எவ்வாறு வாழ்கின்றன என்பதை அறிய வேண்டாவா? தாங்கள் பொருள் தேடுவது தங்கட்கு மட்டும் என்று கருதாமல், பிறருக்கும் அதனைப் பங்கிட்டுத் தரும் பண்பாடு மக்களிடத்தில் மட்டுமே உள்ளது என்று நினைக்கிறீர்களா? ஆறறிவு படைத்துவிட்ட ஒரே காரணத்தால் அதிக கர்வம் கொள்ளவேண்டா. கோசல நாட்டிலே விலங்குகளும் பல்லுயிர் ஒம்பும் பண்பாட்டை மேற்கொண்டு வாழ்கின்றன. பெரியவர்கள் எவ்வாற்றானும் பிறருக்கு உபகாரஞ் செய்ய விரும்புவார்கள். தங்கள் வசதிக்கேற்ப உடலால் உபகாரஞ் செய்தலும், கையிற் கிடைத்த பொருளைப் பிறருக்குத் தருதலும் உபகாரம் என்றே கூறப்பெறும். இவ்விரு வகையிலும் கோசல நாட்டில் வாழும் பிராணிகளும் பிறருக்குப் பயன்படும் சிறப்பைக் கண்டு வரலாம், வாருங்கள்:

அதோ ஒரு குளம் தெரிகிறதன்றோ? அதில் ஒரு தாமரைப்பூ இருக்கிறது பாருங்கள். அந்தப் பூவை நன்கு கவனித்தீர்களானால், அதில் ஒரு சிறிய அன்னக்குஞ்சு உறங்குவதைக் காணலாம். அந்த அன்னக்குஞ்சு இங்ங்ணம் அயர்ந்து உறங்குகின்றதே! அதன் பசி தீர்ந்ததெப்படி? சுகமாகத் துரங்கச் செய்வது எது? தேரை வேறு எந்த வகையில் அன்னக்குஞ்சுக்கு உபகாரம் செய்ய முடியும்? தன்னால் முடிந்த செயலைச் செய்கிறது. இதுவே கோசல நாட்டின் தனிச் சிறப்புக்கு ஒரு காரணம். இயல்வது கரவா இயல்பைக் காணும் நாடே சிறந்த நாடென்பதைக் கவிஞன் மிக நன்றாகச் சுட்டி உணர்த்துகிறான் என்று எண்ணுகிறீர்களா? அந்தக் குளத்தில் சகதியில் கிடந்து மகிழும் எருமைகள் வீட்டிலே நிற்கின்ற தம் கன்றுகளைப் பரிவுடன் நினைக்கப் பால்சுரந்து ஒழுகுகிறது. அந்தப் பாலை இந்த அன்னக்குஞ்சுகள் வயிறு நிரம்ப உண்டு திளைக்கின்றன. இப்படி உண்டியை முடித்துக்கொண்ட