பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கோசல மக்கள் வாழ்வு முறை

 செல்வப் பயன்

நாடு என்ப நாடா வளத்தன (குறள், 739) என்றார் வள்ளுவப் பெருந்தகையார் -

இயற்கையில் கிடைக்கும் செல்வம் மிகுதியாய் இருத்தலே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.

மக்கள் முயற்சி எவ்வளவு அதிகப்படினும், அதற்கேற்ற பயன் இல்லையாயின், அந்நாடு முன்னேற இயலாது

கோசல நாட்டின் நீர் வளம், நில வளம் எத்தகையவை என்பதைக் கம்பநாடன் குறிக்கும் வகையை முன்னர்க் கண்டோம். இத்துணை வளம் பெற்ற நாட்டில் வாழும் மக்கள் எத்தகையர் என்பதைக் காணல் வேண்டும். ஒரு நாடு மிக்க வளமுடையது என்ற ஒரே காரணத்தால் மட்டும் அந்நாட்டு மக்களும் சிறந்தவர்கள் என்று கூறி விடுதற்கில்லை. இன்று அனைத்து வளங்களும் நிறைந்த நாடுகளிலேயே போரைப் பற்றிய அச்சம் மிகுந்திருக்கிறது. நம்மைப் போன்று சாதாரண நாட்டில் வாழும் மக்களாவது ஓரளவு அமைதியுடன் வாழ்கின்றார்கள். எனவே, வளப்பம் மக்கனை நல்வழிப்படுத்தவும் பயன் படலாம்; அன்றேல், மேலும் மேலும் பேராசைப்படவும், பிறரை அடிமைப்படுத்தும் நோக்கத்திற்கு இரையாக்கவும் பயன்படலாம். இவ்விரு வகையிலும் பொருட் செல்வம்