பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 13

 கொண்டிருப்பார்கள். 'உளங்குளிர்ந்த போதெல்லாம் உகந்து உகந்து உரைப்பனே' (திருமுறை-2, திருத்துருத்தி-9) என்று ஞான சம்பந்தர் அருளிச் செய்தபடி எப்பொழுதுமே பாடிக் கொண்டு இருப்பார்கள் போலும்! இவ்வகை மக்கள் ஒரு நாட்டில் இருப்பதே அந்நாட்டின் செல்வ நிலைக்குத்தக்க அடையாளம். ஏனையோர் போல இப்பாணர் ஒர் இடத்தில் நிலைத்துத் தங்கி வாழ்பவர் அல்லர். அவ்வாறு நிலைத்து வாழும் வாழ்க்கையை இவர்கள் விரும்புவதும் இல்லை; நாளை உணவுக்கு என்ன செய்வோம்!” என்று கவலைப்படுவதும் இல்லை.

ஊர்எலாம் அட்ட சோறு கம்மதே;உவரி சூழ்ந்த பார்எலாம் நமது பாயல்

என்று பரஞ்சோதியார் பாடியதை வாழ்க்கையின் குறிக் கோளாகக் கொண்ட கூட்டத்தார் இப்பாணர். இவர் சிறிய யாழை இடப்பக்கத்தில் தாங்கி ஊர் ஊராகச் சென்று தமது இனிய இசையால் மக்களை மகிழ்விப்பர். அம்மக்கள் இவர்கள் இசையைக் கேட்டு மகிழ்ந்து, பிறகு பசிப்பிணிக்கு உணவிட்டுப் போக்குவார்கள். இது பழந்தமிழ் நாட்டில் காணப்பெற்ற இயல்பு. தனது உடம்பின் குருதி முழுதும் தமிழ்க் குருதியாக ஒடப்பெற்ற தமிழ்க் கம்பன், இவ்வியல்பைக் கோசலம் என்று, தான் கனவு கண்ட நாட்டுக்கு ஏற்றுகிறான். தமிழ் நாட்டின் சிறந்த இயல்புகளையும் அமைப்புக்களையும் இங்ஙனம் அவன் கோசலத்திற்கு ஏற்றியுள்ள முறையை, அவனுடைய இராமாயணத்தை ஒரு முறை கற்றாரும் கற்பாரும் கன்கு அறிவர். இப்பாணர் பகலவன் உதயஞ் செய்வதற்கு முன்பே எழுந்து தமது இனிய கீதத்தை இசைத்துக் கொண்டு ஊர் முழுவதும் சுற்றி வருகின்றனராம். இவர்கள் பாடலின் இனிய ஓசை, உயர்ந்த மாடிகளின் மேல் படுத்து உறங்கும் மயில்களின் உறக்கத்தை கலைத்து, எழுப்புகின்றதாம். காலை நேரத்தில் இத்தகைய இனிய,