பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 அ. ச. ஞானசம்பந்தன்

 கீதத்தைக் கேட்டு மயிலே எழும்போது மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?

தெள்விளிச் சிறியாழ்ப் பாணர் தேம்பிழி நறவம் மாந்தி
வள்விசிக் கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல்
வெள்ளிவெண் மாடத்து உம்பர் வெயில்விரி பசும்பொன் பள்ளி
எள்ளருங் கருங்கண் தோகை இன்துயில் எழுப்பும் அன்றே

(கம்பன்- 89)

(தெள்விளி- இசைப்பாடல் பாடுகின்ற, தேம்பிழி நறவம் மாந்தி- மதுரச் சாறாகிய கள்ளைக் குடித்து, வள்விசிக் கருவி பம்ப- கட்டு அமைந்த தண்ணுமை முதலிய தோல் கருவிகள் ஒலிக்க, வயின்வயின்ஆங்காங்கே)

இவ்வளவு விடியற் காலையில் நறவம் மாந்தி உலாப் போகிற இக்கூட்டத்தார் எவ்வளவு கவலையற்றவர் என்பதை நாம் ஊகிக்க இடந்தருகிறான் கவிஞன்.

ஊருக்குள்

நாம் இப்பாடல்களைக் கேட்டுக்கொண்டு இங்கேயே நின்று விடாமல், சற்று ஊருக்குள் செல்வோம் வருகிறீர்களா? இதோ தெரிகிற இப்பெரிய கட்டடம் என்னவென்று நினைக்கிறீர்கள்? இஃது இளம்பெண்கள் பந்தாடுகிற இடம். ஊருக்குப் பொதுவாய் இருக்கிற இப்பந்தாடும் இடம் இன்று நம் நாளில் உள்ள [1] போன்றது. இதை அடுத்து நிற்பது கட்டமைந்த இளைஞர்கள் வில் வித்தையோடு ஏனைய கலைகளையும் பயிலக்கூடிய கூடம். இவை இரண்டும் முறையே சண்பகச் சோலையிலும் ஊர்ப்புறத்திலும் அமைந்துள்ளன. விளையாடும் இடங்களை அமைப்பதிற்1.Socief Club1.Socief Club

  1. ‘சமுதாயக் கழகம்’