பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 17

 பணிகளுள் ஒன்றையுஞ் செய்யாமல் இருக்கும் இவர்கள், தமக்கும் பிறருக்கும் பாரமாய் உள்ளவர்கள். வேறு அலுவல்கள் இன்மையால் இவர்கள் விளையாட்டில் தங்கள் காலம் முழுவதையும் வீணே செலவழிக்கின்றார்கள். அவ்விளையாட்டையும் பயனுடையதாகச் செய்யாமையின், இவர்கள் சோம்பேறிகளே! இளைஞர்களாய் உள்ளவர்கள் இவ்வாறு பழகிக் கொள்வார்களாயின், ஒரு நாட்டிற்கு இதைவிடத் தீமை வேறு இருத்தற்கில்லை. எனவே, கவிஞன் மிக்க கவனத்துடன் இவர்கள் செய்யும் காரியத்தைக் கலை என் று கூறுகிறான்; கலை தெரிகழகம் என்ற சொற்களால் இவ்வரிய பொருளைப் பெற வைக்கிறான். வில்வித்தை போன்ற கலைகளை இவர்கள் வயிறு வளர்க்கும் சாதன மாகக் கொள்ளவில்லை. ‘விளையாட்டாகச் செய்யப் படுவதே கலை’, என்றார் [1] என்ற மேனாட்டுத் திறனாய்வாளர்.

போர்க்கலை

இனி இன்னுஞ் சிறிது தூரம் உள்ளே சென்று பார்த்தால் ஆண் மக்கள் தங்களுக்கே உரிய போர்த்தொழிலைப் பயிலும் இடங்களைக் காணலாம். யானைப் போர் முறை ஓர் இடத்தில் பழகுகிறார்கள்; இதோ அதனை அடுத்தவிடத்தில் குதிரை ஏற்றமும், அடுத்த இடத்தில் விற்படை முதலியவற்றையும் பயில்கிறார்கள். இவை அனைத்தையும் சேர்த்துக் கவிஞன் "போர்க்கலை தெரிதலில் பொழுதுபோம் சிலர்க்கு" (160) என்று கூறுமுகத் தான் இவர்கள் வாழ்நாளில் இதனையே தொழிலாகக் கொண்டவர்கள் என்பதை அறிவிக்கிறான். பொழுது போம்' என்றதால், நாள் முழுவதும் இதனையே செய்கிறார்கள் என்பதும் பெறப்படுகிறதன்றோ?1. Sydney Colvin in his Essay on Art. (Ency-Britanica ) க-21. Sydney Colvin in his Essay on Art. (Ency-Britanica ) க-2

  1. சிட்னி கால்வின்