பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 19


போன்றாதாகும்',என்று கூறினார் ஆசிரியர்; ஆனால், இவ் உண்மையை அறிகிறவர் உலகில் மிகச் சிலரே என்பதையும் நன்கு அறிந்தவராகலின், அஃது உணர்வார்ப்பெறின்' என்றும் சேர்த்துக் கூறினார்.

கோசலம் என்னும் கனவு நாட்டிற்கூட மக்கள் இவ்விரு வகை மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள் என்பதைக் கம்பன் அறிவுறுத்தவே செய்கிறான்.

வாழ்க்கையில் இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுவதற்குக் காரணம், ஒரு நாட்டின் செல்வ வளமேயாகும். அச்செல்வ வளம் எத்தகையது என்பதை முன்னரும் கண்டோம். இனிக் கவிஞன் ஒரே பாடலில் இத்தனைவளங்களையும் கூறும் முறையைக் காண்போம்.

விளைநில வளம்

நீரிடை உறங்கும் சங்கம், கிலத்திடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
துனரிடை உறங்கும் ஆமை, துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்: பொழிலிடை உறங்கும் தோகை

(37)

இப்பாடலின் பொருள் மிக எளிதாய் விளங்குகிறது; ஆனால், அதே காரணத்தால் நம்மை ஏமாற்றியும் வருகிறது. விளங்குகிற காரணத்தால் நுணுகி ஆராய்ச்சி செய்யாமல் விட்டுப் போய்விட்டால், இதிலுள்ள பொருள் நயத்தை இழந்து விடுவோம். தண்ணீரில். சங்கு உறங்குகிறது. ஏனெனில், தண்ணீரில் கிடந்து புரளாமல் எருமைகள் நிழலில் அசை போட்டுக் கொண்டு உறங்குகின்றன. இவை அனைத்திற்கும் ஏன்?' என்ற வினாவை எழுப்பினால் உண்மை விளங்கும். எருமை ஏன் நிழலில் படுத்து உறங்குகிறது. தெரியுமா? வயிற்றில் பசி இன்மையாலேதான். சுகம் அனுபவிப்பதில் ஈடு