பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆடவரும் பெண்டிரும்

 நல்ல நாடு

உலகின் சில பகுதிகளைப் புண்ணிய பூமி என்று கூறுகின்ற வழக்கம் இன்றும் உண்டு.

ஒரு நாட்டிற்கூடச் சில பகுதிகளை இவ்வாறு கூறும் இயல்பும் உண்டு.

இங்ஙனம் கூறும் வழக்கம் இன்று நேற்றுத் தோன்றியதன்று; மிகப் பழைய நூல்களிலும் இத்தகைய பழக்கத்தைக் காண்கிறோம்.

ஒரு நாட்டை நல்ல நாடு என்றும், புண்ணிய பூமி என்றும் எப்பொழுது கூறுகிறோம்? அந்த நாட்டின் வளப்பத்தையும் செல்வச் செருக்கையும் கொண்டு இப்பெயர் தோன்றுவதில்லை. பின்னர் என்ன காரணத்தால் இப்பெயர் வருகிறது: பழந்தமிழ்ப் புலவர்களுள் ஒருவராகிய ஒளவையார், இவ்வினாவை எழுப்பி விடையுங்கூறுகிறார்.

நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே!

(187)