பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 29 கல்வியுடைமையின், அதன் பயனாகப் பண்பாடு அமைந்தது என்று கூறுகிறான் கவிஞன். இந்த இடத்தில் விருந்தினர் வருகையைக் கண்ட மகளிர் உள்ளத்து உவகையை உவமானமாகக் கம்பன் கையாளும் திறன் சிந்தித்து மகிழ்தற்குரியது. இரண்டு இடங்களில் அவன் கூறுவனவற்றைக் கேட்டு மகிழ்ந்துவிட்டு மேலே செல்வோம். - r விருந்தினர் முகம்கண் டன்ன விழா அணி விரும்பு வாரும் (46) விருந்துகண் டுள்ளம் களிக்கும் மங்கையர் முகம்எனப் பொலிந்தன. கமலம் (4184}. விருந்தளிக்கும் பண்பாட்டுச் செல்வத்தின் விழுமிய தன்மையைக் கவிஞன் எப்படி உணர்த்திச் செல்கிறான் பார்த்தீர்களா! இனி இக் கல்விச்செல்வம் கற்றல் கேட்டல் என்று இரு, வகைப்படும் என்பது நாம் அறிந்ததேயாம். கோசல மக்கள் எதனை மிகுதியாகப் பெற்றார்கள் என்பதையும் கம்பன் கூறுகிறான். நம் நாட்டவர்கள், கற்றலிற் கேட்டலே நன்று' என்று கூறினார்கள். இவ்வாறு கூற ஒரு காரணமும் உண்டு. ஒரு மனிதன் ஒவ்வொன்றையும் தானே கற்றல் வேண்டும் என்று முடிவு செய்து கொண்டால், இவ்வுலகில் உள்ள கலைகளில் ஒன்றைக் கற்கக்கூட அவன் வாழ்நாள் போதாது. எனவே, தானே முயன்று ஒவ்வொன்றையும் கற்றலைக் காட்டிலும், கற்றவரிடத்துக் கேட்டல் மிகவும் எளிது. ஒருவர் பன்னெடுங் காலம் செலவழித்துப் பயின்ற ஒன்றை மிக எளிதாக ஒரு மணியிலோ, இரண்டு மணியிலோ கூற முடியும். அதனைக் கேட்பவர் வருத்தம் யாதுமின்றி. அதனை எளிதில் அறிந்து கொள்ளலாம் அன்றோ? இதனாலேயே கேட்டல் சிறந்தது என்று கூறினார்கள்.