பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 O அ. ச. ஞானசம்பந்தன் இத்தகைய செவிவழிக் கல்வியே’ கோசலத்தில் மிக்கிருந்தது எனக் கவிஞன் கூறுகிறான். கேள்விச் செல்வம் துய்த்தல் பருந்தெடு கிழல்சென்று அன்ன இயல் இசைப் பயன்துய்ப் பாரும் மருந்தினும் இனிய கேள்வி செவியுற மாந்து வாரும் (46) காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள் (82) என்ற அடிகளால் கேள்விச் செல்வத்தை மிகுதியும் துய்ப்பவர்கள் கோசல நாட்டு ஆடவரும் பெண்டிரும் என்ற கருத்தைக் கூறுகிறான். கேவலம் பொழுது போக்கின் பொருட்டு இன்று நூல்களைப் படித்தலும், சொற்பொழிவு கேட்டலும் நடைபெறுகின்றன. பயனில் சொல் பாராட்டு வானை, மகன், எனல்; மக்கட் பதடி எனல்,' (196) என்று வள்ளுவர் கூறியிருந்தும் இன்று நம்முள் பலரும் இதனைச் செய்ய அஞ்சுவதில்லை. உண்மையில் கேள்வி நமக்குப் பயனுடையதாய் இருப்பின் அன்றி, அது வீண் காலம் போக்குவதேயாகும். எனவே, கோசல மக்கள் கேட்டது, 'மருந்தினும் இனிய கேள்வி' என்று கூறப் படுதலால், அமிழ்தம் உண்பவர்க்குத் தப்பாமல் நன்மை விளைப்பதுபோல, இவர்கள் கேள்வியும் தப்பாமல் நன்மை விளைத்தது என்கிறான். மருந்தினும் இனிய’ என்றது, ஈண்டு நோக்கற்பாலதாம். மருந்து- அதாவது அமிழ்தம்- நாவுக்கு மட்டுமே இனிக்கும். ஆனால், கேள்வியோ, செவிக்கும், உள்ளத்திற்கும்கூட இனிமை பயப்பதாகும். அமிழ்தமோ, உண்ணுங்கால் மட்டுமே இனிக்கும். ஆனால், கேள்வியோ, கேட்கும்போது மட்டுமன்றி அதன் அருமையை எண்ணும்போதும் பேசும் போதுங்கூட இனிக்கும். ஆகவேதான் மருந்தினும் இனிய கேள்வி' என்றான் கவிஞன். 'வாயுறை வாழ்த்து' என்பதொரு வகைப்பாடல் தொல்காப்பியத்தில் குறிக்கப்பெறுகிறது. வேம்பும் கடுவும் அன்ன வெஞ்சொல்லால், பின்னர்