பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 31 நன்மை விளைக்கும் என்ற கருத்தால், இடித்துச் சொல்வ தாகும் இது. கடுமையான சொற்களும் இக்காரணத்தால் விரும்பி ஏற்றுக்கொள்ள ற்குரியன. ஆனால், அவ்வாறு சொல்லப்படும் சொல்லும் இனிமையுடையதாய் இருக்கு மாயின், இன்னுஞ் சிறப்பல்லவா? அதை மனத்துட் கொண்டுதான் கவிஞன், இனிய கேள்வி' என்று கூறுகிறான். இவ்வாறு மக்கள் இனிய கேள்வி ஞானத்தை எவ்விடங்களிற் பெற்றார்கள் என்ற வினா அடுத்துத் தோன்றுமன்றோ? நல்ல சொல்லைக் காதால் கேட்பதும் அரிதாகவுள்ள இக்காலத்தில் இதுபற்றி அறிய வேண்டுவது மிகவும் இன்றியமையாததாகிறது. கோசல மக்கள் நல்ல கேள்வி ஞானத்தைப் பெறுவதற்கென்றே பல அவைகள் அந்நாட்டில் இருந்தனவாம். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும் என்று கூறினார், நம் காலத்தில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி பாரதியார். பாரதியார் கண்ட கனவு புதியதன்று. தமிழ்க் கவிஞர்கள் பரம்பரையாகக் காண்கிற கனவுகளுள் ஒன்றாகும், இது. கம்பநாடனும் கோசலத்தில் இத்தகைய கேள்வி ஞானத் தைப் பரப்பும் அவைகள் இருந்தன என்று கூறுகிறான்.

பட்டி மண்டபம்

மன்னவர் தருதிறை அளக்கும் மண்டபம் அன்னமென் னடையவர் ஆடும் மண்டபம் உன்னரும் அருமறை ஓதும் மண்டபம் பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம் (154) என்பதில் நான்கு வகையான மண்டபங்கள் கூறப் படுதலைக் கவனித்தல் வேண்டும். பலநாட்டுச் சிற்றரசர் களும் கொண்டுவந்து கொடுக்கும் கப்பப் பொருள்களை அளந்து கணக்கிடுகின்ற மண்டபம் ஒரு புறம்: