பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 0 அ. ச. ஞானசம்பந்தன் அன்னத்தை ஒத்த மென்னடையுடைய மகளிர் ஆடுகின்ற நடனமண்டபம் மற்றொரு புறம்: உணர்தற்கரிய அருமையின் அளவை உள்ளத்தானும் கணிக்க முடியாத, அளவு பெருமைமிக்க வேதங்களை ஒதுகின்ற மண்டபம் பிறிதொரு புறம்; உரைத்தற்கரிய பெருமை வாய்ந்த பல்கலைகளை ஆராய்ச்சி செய்கின்ற பட்டி மண்டபம் என்பது இன்னொரு புறம். இப்படியாக நான்கு மண்டபங்களைக் காட்டுகிறான் கம்பன் நமக்கு. சமுதாய வளர்ச்சிக்குப் பொருள் அடிப்படை யன்றோ? எனவே, கவிஞன் பொருள் குவியும் மண்டபத்தை முதலிற்காட்டி அடுத்து உள்ள எழுச்சியை ஊட்டும் நடன மண்டபத்தைக் காட்டுகிறான். கல்வி சமுதாயத்திற்கு இன்றியமையாததல்லவா? எனவே கல்வி யின் சிகரமாகிய மறை ஒதும் மண்டபத்தைக் காட்டு கின்றான். கற்றதனால் மட்டும் பயன் உண்டா? தெளிவு இல்லாமல் நெட்டுருச் செய்துவிட்டதால் நன்மை விளையுமா? எனவே, கற்றவற்றை எல்லாம் வல்லோர் பல்லோருடனுமிருந்து ஆராய்ச்சி செய்து உண்மை. காண்பதன்றோ கற்றவர்க்கழகு? பட்டிமண்டபம் என்பது பெரும்பான்மை சொற்போர் நடைபெறும் இடத்தையே குறிக்கும். எனவே, இங்கே குறிப்பிட்ட மண்டபத்தில் கலையாராய்ச்சி நடைபெற்றதென்றும் அதனைக் கேட்பவர் மிகுதியும் பயன் பெற்றனரென்றும் அறிய முடிகிறது. gısır samsvæsir (Fine Arts) இவ்வளவு கல்வி வளர்ச்சியடைந்த நாட்டில் கலையின் சிகரமாய் உள்ள கவிதை தோன்றாமலா இருக்கும்? ஒரு நாட்டின் கலை வளர்ச்சியை அறிவிப்பன அந்நாட்டு மொழியில் தோன்றிய கவிதைகள் என்று கூறுதல் தவறாகாது. கோசலநாட்டில் ஓவியக்கலை மிக்கிருந்தது. என்பதை, எழுதுசித் திரங்களும், இமைப்பி லாதவே,’’