பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் C 33 (142) என்ற அடியால் கவிஞன் காட்டுகிறான். எத்துணை அறிவு வளர்ந்த நாடாயினும், அந்நாட்டில் கலைவளர்ச்சி இல்லையாயின், நாகரிகமும் பண்பாடும் நன்கு வளர வில்லை என்றுதான் கூற வேண்டும். நல்ல பண்பட்ட மனமே கலை முகிழ்த்தற்குச் சிறந்த நிலைக்களம். அக்கலைகள் பல திறப்பட்டன. சாதாரணக் கலை யென்றும், நுண்கலையென்றும் கலையை இரண்டாகப் பிரித்தனர் திறனாய்வாளர். உணவு சமைத்தல் முதல் அனைத்தும் கலை எனப்படுமேனும், இவை சாதாரணக் கலைகள் எனப்படும். ஆனால் கட்டடம், சிற்பம், ஒவியம், இசை, கவிதை என்பனவே நுண்கலைகள் எனப்படும். தான் கண்ட கனவு நாட்டில் இத்தகைய நுண்கலைகள் மலிந்துள்ளன என்கிறான் கவிஞன். கவிதைக்கலை கோசலத்தில் மிக்கிருந்த இசைக்கலை பற்றியும், சித்திரக்கலை பற்றியும், நாடு முழுவதும் நிறைந்திருந்த கட்டடக்கலை பற்றியும் கூறிய கவிஞன், இனிக் கவிதைக் கலை பற்றியும் கூறத் தொடங்குகிறான். கோசல நாட்டில் புலவர்கள் நிறைந்துள்ளார்கள். அவர்கள் சிறு நூல் களையும் பாடல்களையும் பாடுவதில் கவனம் செலுத் தாமல், பெருங்காப்பியம் பாடுவதில் முனைந்துள்ளார். களாம். அவர்கள் ஆக்கும் காதைகள் கவிதைகளால் ஆக்கப்படுகின்றனவாம். பெரி ய வரலாறுகளைக் கூறுகையில் உரைநடையிலும் கூறுவதுண்டு; ஆனால், கவிதையில் கூறுவது போன்ற அவ்வளவு சிறப்பை அவை பெறுவதில்லை. எனவே, கவிஞன் கோசலத்தில் புலவர்கள் கூறும் வரலாறுகள் அனைத்தும் கவிதை களாகவே உள்ளன என்று கருத்துப்பட, காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்' (82) என்று கூறுகிறான். சிறந்த கவிதை செவ்விய ஓசை நயம் உடைதாய் இருக்கும். இன்று அச்சடித்த கடிதத்தில் பொறித்துள்ள みー 3