பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 O அ. ச. ஞானசம்பந்தன் கவிதையை மனத்திற்குள்ளாகவே படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டுள்ள நாம் கவிதையின் சிறந்த ஒரு பகுதியை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கவிஞன் கவிதையை இயற்றும்பொழுது கேட்போரின் காதுகளை நம்பித்தான் 'சப்த ஜாலங்களை'ச் செய்கிறான். எனவே, கவிதையை நன்கு அனுபவிக்க வேண்டுமாயின், வாய் விட்டு, ஒலி காதுகளில் விழும்படியாக, உரக்கப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் கவிதையின் முழுப்பயன் தெரியும். இதை மனத்துட் கொண்ட கவிஞன், செவி நுகர் கனிகள் என்று கூறுகிறான். கவிகள்' என்ற பாடமும் உண்டு. காதுக்குள்ளே கனி நுழையுமா என்று தெளிந்த சந்தேக ரசிகர்கள் கனியைக் கவி'யாக்கி ஆறுதல் அடைந்திருக்க வேண்டும். அதன் பயன்தான் கவிகள் என்ற பாடம். 'செவி நுகர் கனிகள்' என்பதை நன்கு துய்த்து இன்புற்று மகிழ்ந்தமையாலேதான் பாரதியார், - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்று அழுத்தந் திருத்தமாகக் கூறிப் போந்தார். ஆனதாலேதான் காதுகள் நன்கு கேட்டு அனுபவிக்கக் கூடிய கவிதைகளால் ஆக்கப்பெற்றிருந்தன என்கிறான் கோசல நாட்டுப் புலவர்கள் பாடிய காதைகளைக் கம்பன். சரிதானே? . வெண்மை இல்லை இதனை அடுத்துக் காண வேண்டிய பயனும் ஒன்றுண்டு; ஒரு நாட்டின் கல்வி நிலை நன்கு அமைந் திருந்தால், அந்நாட்டு மக்களின் அறிவு திண்மை யுடையதாய் இருக்கும். கல்வி உடையார் அனைவரும் திண்மை உடையார் என்று கூறல் இயலாது. கற்றார் அனைவரும் திண்மையுடையராயின், கற்றறி மூடர்" என்ற முதுமொழி தோன்றக் காரணம் இல்லை. மேலும், வள்ளுவப் பெருந்தகையாரும்,