பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 35 அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரி என்றல்லவா கூறினார்? வெளிறு என்று ஆசிரியர் இங்குக் குறித்தது அறியாமை ஆகிய தன்மை, கற்றறிவுடைமை மனிதனிடத்தில் ஆழ்ந்து கிடக்கும் அறியாமையைப் போக்கி விடாது என்பதே நம்மவர் கண்ட அனுபவ உண்மை. கல்வி அறியாமையைப் போக்குவதாயின், கற்றார்கள் மிகுதியாக உள்ள நாட்டில் குற்றம் மிகுதியாக இருக்க வழி இல்லை. ஆனால், இன்றைய உலகை மேலாகப் பார்த்தாலும், இக்கூற்று உண்மையற்றது. என்பது விளங்கும். நூற்றுக்குத் தொண்ணுாறு வீதம் கற்றவரைப் பெற்ற நாடுகளே பேராசை கொண்டு போரைப் பற்றித் தீவிரமாக ஆராய்ச்சி செய்கின்றன. எனவே, கல்வியால் மட்டும் பயனில்லை என்பது கண்கூடு. கோசலத்தில் கற்றார் நிறைந்துள்ளனர் என்று மட்டுங் கூறினால் எங்கே இந்தக் குறைபாடு வந்து விடுமோ என்று அஞ்சிய கவிஞன், வெண்மை அவர்களிடம் இல்லை என்று கூறுகிறான். - வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்; - வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால். (84) வறுமை இன்மையால் கொடைச் சிறப்புத் தெரிவ தில்லை; போர் இன்மையால் வலிமை தெரிவதில்லை; பொய் இன்மையின் உண்மையின் சிறப்புத் தெரிவதில்லை; கேள்வி ஞானம் உண்மையின் அறிவின்மை இல்லை, என்ற கவிதையால் வெண்மையாகிய அறியாமை அந்நாட்டில் இல்லாமையும் அதற்குரிய காரணமும் நன்கு விளக்கப் பெற்றுள்ளன.