பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 0 அ. ச. ஞானசம்பந்தன் இதே கருத்தை மற்றொரு வகையாகவும் கூறுகிறான் கவிஞன். ஒருவரை எப்பொழுது கல்வியுடையார் என்று கூறுகிறோம்? தம் பெயரைத் தட்டித் தடவி எழுதத் தெரிந்தவர்களைக் கற்றவர் என்கிறோமா? இல்லையே! அப்படியானால், எவ்வளவு கற்றவர்களைக் கற்றவர் என்று கூற முடியும்? கற்றவர் என்று ஒருவரைக் குறிப்பதே ஓர் ஒப்பு நோக்குச் சொல்லாகும். தம் பெயர் மட்டும் எழுதத் தெரிந்தவர்கூட, அதுவுந் தெரியாதவரை நோக்கக் கற்றவர்தாம். இவரை நோக்க எடுத்த நூலை வாசிக்கத் தெரிந்தவர் கற்றவரென்றே கூறப்பெறுவர். அப்படியானால், கற்றாரென்று யாரைத்தான் குறிப்பது? கோசல நாட்டில் அனைவரும் நன்கு கற்றவராகவே உள்ளனர். ஆகவே, ஒப்பு நோக்கு முறையில் கற்றார்’ கல்லாதவர்' என்று கூறத்தக்கார் ஒருவரும் கோசலத்தில்: இல்லையாம். , “ . . * கல்லாது நிற்பார் பிறர்.இன்மையின்கல்வி முற்ற வல்லாரும் இல்லை; அவைவல்லர் அல்லாரும் இல்லை (166): என்ற பாடலின் மூலம் இவ்வழகிய கருத்தைக் கூறுதல் காண்க. எனவே கோசல நாட்டில் வாழ்ந்த ஆடவரும் பெண்டிரும் மிகவும் நல்லவர் என்பதும், சிறந்த அறிவும். பண்பாடும் நாகரிகமும் பெற்றிருந்தனர் என்பதும், கல்வியிற் சிறந்தவர் என்பதும், சிறந்த கேள்வி ஞானம் உடையவர் என்பதும் இதுவரை கூறியவற்றால் விளங்கக் காண்கிறோம். ஒரு நாட்டில் மக்கள் எத்தகையவர்களாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எத்தனையோ பெரும் புலவர் தம் கருத்தைக் கூறியதுண்டு. ஆனால், கவிச் சக்கரவர்த்தி கம்பநாடன் கூறும் மக்கட் சமுதாயம் தனிப்பட்ட சிறப்புடன் விளங்குவதை இக்கவிதைகள் அறிவிக்காமல் இரா. -