பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 37 கம்பன் அடிமனக் கருத்து இத்தகைய சமுதாயத்தைக் கம்பன் படைக்கக் காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு பார்த்தால் கம்பனது அடிமனத்தை அரித்துக் கொண் டிருந்த ஒன்றைப்பற்றி நமக்குத் தெரியவரும். பிற காப்பியங்களில்- தமிழாகட்டும், வடமொழி யாகட்டும், பிற மொழியாகட்டும்- நாட்டை வருணிக்கும் போது சிறப்புடைய நாடு என்று சொல்வார்கள். அதில் ஒன்றும் ஐயப்பாடு இல்லை. ஆனால், அந்தச் சிறப்பான நாட்டை வருணிக்கும்போதுகூட உடையார், இல்லார்’ பிரிவினை இருந்தே தீரும். அந்த உடையார் இல்லார் என்ற பிரிவினையை அறவே ஒழித்துப் புதியதொரு சமுதாயத்தை நிர்மாணித்த பெருமை கம்பனுக்கே உரியதாகும். . - - அதனை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு நாட்டைக் கம்பன் படைப்பதற்கு எது காரணமாக இருந்திருக்கும் என்று சிந்திப்போமேயானால் ஒருசில எண்ணங்கள் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் சரியானவைதாம் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அப்படிப்பட்ட எண்ண ஓட்டம் வருவதைத் தடை செய்ய முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். கம்பன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. பல்லவர்கள் வீழ்ச்சி அடைந்து, சோழர்கள் அப்போதுதான் தலை துரக்கத் தொடங்கினர். இந்த இடைக் காலத்தில்தான் கம்பன் தோன்றியிருக்கிறான். இலக்கியத் திறனாய் வாளர்கள் பெருங்காப்பியம் தோன்றுவதற்குரிய கால கட்டத்தைக் குறிப்பிடும்போது இரண்டு நிலைகளில் பெருங்காப்பியங்கள் தோன்றக்கூடு என்றும் சொல் கிறார்கள். . " . . -