பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 39 தவர்கள்' என்ற பெரும் பிரிவைக் கொண்டிருந்தது என்பதில் ஐயப்பாடே இல்லை. சங்ககாலம் தொடங்கிப் பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டு முடியத் தமிழகத்தில்- உலகத்தில் வேறு எல்லாப் பகுதிகளிலும் இருப்பது போலத்தான் இவ்வேறுபாடு இருந்திருக்கிறது. உடையவர்கள் ஒரு தனிக் கூட்டமாக இருந்திருக் .கிறார்கள். இல்லாதவர்கள் ஒரு தனிக் கூட்டமாக இருந் திருக்கிறார்கள். இல்லாதவர்களிலே புலவர்களாக, அறிஞர்களாக இருந்தவர்கள் இந்த உடையவர்களை அண்டி வாழ்ந்திருக்கிறார்கள். உடையவர்களும் ஏதோ அந்தப் பெருஞ் சொத்துக்கும் தாங்கள் உரிமைக்காரர்கள் என்று நினைக்கவில்லை என்று தெரிகிறது. இன்று மகாத்மா காந்தி சொல்வதுபோலப் பெரும் சொத்துடையவர்கள் அந்தச் சொத்துக்குத் தாங்கள் உரிமையாளர்கள் என்று நினைக்காமல், அ ைத ப் பாதுகாத்துப் பங்கிட வேண்டிய கடப்பாடு உடை யவர்கள் என்ற தர்மகர்த்தா முறையில்தான் பழந்தமிழ்ச் செல்வர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. கம்பனுடைய காலத்திலும் அப்படித்தான் இருந் திருக்க வேண்டும். கம்பனுடைய வரலாறு நமக்குத் தெரியவில்லை. ஆனால், அதே நேரத்தில் அவன் தன் காலில் நிற்க முடியாதவனாய், அதாவது அவனுடைய குடும்பம் அவனைத் தனிப்பட்ட முறையில் வாழ வைக்க வாய்ப்பு இல்லாததாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் சடையப்ப வள்ளல் என்ற பெரியதொரு பெருமகனை அண்டித் தன் வாழ்நாளைச் செலவிட்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. சடையப்பரைப் பொறுத்தமட்டில் முழுவதும் கம்பனை மகனாகவே ஏற்றுக்கொண்டு அற்புதமாக வளர்த்தான் என்பதில் ஐயப்பாடு இல்லை. அந்த நன்றிப் பெருக்கைக் கடைசிவரை கம்பன் மறக்கவும் இல்லை.