பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 0 அ. ச. ஞானசம்பந்தன் உடையார் இல்லார் இருக்கிற சமுதாயத்தில் இப்படிப் பட்ட குறைபாடுகள் இருந்துதான் தீரும். இவற்றையெல்லாம் மனத்தில் வாங்கிக்கொண்ட கம்பநாடன் இவற்றுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தான் போலும். ஆகவே, தான் டாட எடுத்துக்கொண்ட காப்பியத்தில் கோசல நாட்டில் இப்படி ஒரு கற்பனைச் சமுதாயத்தை அமைத்து, பிரச்சனையே இல்லாத சமுதாயம் என்று காட்ட முற்படுகின்றான். அது மட்டுமன்று. இப்படி ஒரு கற்பனை நாட்டைப் பாடுவதன் மூலம் பின்னே வளர்ந்து வருகின்ற சோழப் பேரரசு சமுதாயத்தை அமைக்கும்போது உடையார்இல்லார் வேறுபாட்டை மிகுதிப்படுத்தாததாய் இருக்க வேண்டும் என்று அவன் கருதியிருத்தல் கூடும். அப்படியானால்- அந்தப் பெருங்காப்பியம் ஒரு கலங்கரை விளக்கமாக நின்று சமுதாயம் எப்படி அமைய வேண்டுமென்று மக்களுக்கு எடுத்துச் சொல்லுகின்ற ஆசானாகவும் அமைந்திருக்கிறது. காப்பியத்தினுடைய பல்வேறு பணிகளில் அறிவுறுத்தல், பயிற்றுவித்தல் முதலான கடமைகளும் இருக்கின்ற காரணத்தினால், தன்னுடைய காப்பியத்தின் தொடக்கத்திலேயே இதனைச் சொல்வதன் மூலம் சோழப் பேரரசில் எப்படிச் சமுதாயம் அமைய வேண்டும் என்பதைக் கவிஞன் கற்பனை மூலம் கண்டான் என்று நினைப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை. இனி, கோசல நாட்டு மக்கள் மேற்கொண்ட வாழ்க்கை பற்றியும் அவர்களது அரசியல் பற்றியும் அடுத்துக் காணலாம். > *