பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசல அரசியல் மக்கள் நிலை கோசல நாட்டு ஆடவரும் பெண்டிரும் பெற்ற, கல்வியையும் அக்கல்வியால் பெற்ற பண்பாட்டையும் கண்டோம். - *. - " - இப்பண்பாட்டை அடிப்படையிற் கொண்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்கள் பெற்றிருந்த அரசியலையும் இனிக் காண்போம். அரசன் மக்களின் பொருட்டு இருக்கிறான். பழந்தமிழ் நாட்டில் அரச உரிமை பரம்பரைச் சொத்தாகவே இருந்து வந்தது. எனினும், அரசன் தன் விருப்பம்போல ஆட்சி செலுத் தாமல், மக்கள் நலம் கருதியே ஆண்டு வந்தான் என்பதை அறிய முடிகிறது. - கோசலநாட்டு மன்னனும் இவ்விதிக்கு விலக்கானவன் அல்லன். அவன் ஆட்சி சிறக்க உதவியவர்கள் அந்நாட்டு மக்களே. மன்னன் எவ்வளவு சிறந்தவனாயினும், மக்கள் மாண்பில்லாதவர்களாய் இருப்பின், அவன் ஆட் சி. சிறவாது. எனவே, கம்பநாடன் தான் படைத்த மன்னனைப் பற்றிக் கூறுமுன்னர் அவனால் ஆட்சி செய்யப் பெற்ற மக்களைப் பற்றிக் கூறுகிறான். 'மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி,” என்று கூறும் பழமொழியைத் திருப்பி வைத்துப் பார்த்தாலும் அஃது