பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 0 அ. ச. ஞானசம்பந்தன் உண்மையாகும். மக்கள் சிறந்த வழி மன்னன் சிறப்பதும், அவர்கள் சிறவாத வழி மன்னன் சிறவாமையும் உண்மையே. எனவே, கோசலநாட்டு மக்கள் எத்தகைய மன்னனைப் பெறத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதைப் பேசுகிறான் கவிஞன். கோபத்தை வென்றோர் அரசனது தலையாய கடமை நாட்டில் குற்றங் களைதல் என்பார்கள். துட்டர்களை அழித்தலும் சிட்டர்களைப் பரிபாலித்தலும் அரசன் கடமைகளுள் தலையாயவை எனச் சுக்கிர நீதி கூறுகிறது. ஆனால் கோசல நாட்டு மன்னனுக்கு இத்தகைய வேலை இல்லை என்கிறான் கவிஞன். குற்றம் நிகழ்ந்தால் அன்றோ அதனைக் களைய வேண்டும்? இந்நாட்டில் குற்றம் செய்வாரே யாரும் இல்லையாம். நமக்கே கொஞ்ச்ம் வியப்பாக இருக்கிறதன்றோ மக்கள் என்று இருந்தால், குற்றம் செய்யாதவர்களாக இருக்க இயலுமா?’ என்று கூடக் கேட்கத் தோன்றுகிறது. இத்தகைய ஐயம் கவிஞனுக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே, அவன் அடுத்த அடியில் இதற்கு விடை கூற முற்படுகிறான். மனிதன் எப்பொழுது குற்றம் செய்கிறான்? அறிவை இழந்த பொழுதுதான் குற்றம் செய்கிறான். அறிவை எப்பொழுது இழக்கிறான்? கோபம் வந்தபொழுதுதான் மனித அறிவு பாழ்படுகிறது. எனவே, கோபமே மனிதன் குற்றம் செய்யக் காரணமாகிறது என்ற உண்மையை பகவத்கீதை'யுங் கூடப் பறைசாற்றுகிறது?, ஆகலின், ஒருவன் குற்றம் செய்யாதிருக்கச் சிறந்த வழி கோபப்படாதிருப்பதுதான். கோபம் எப்பொழுது வாராமல் இருக்கும்? மனத்தில் தெளிவு இருக்கும்பொழுது தான் கோபத்தை வாராமல் தடுக்க இயலும். கோபமே 2. பகவத்கீதை, 2-ஆம் அத்தியாயம், ஸாங்கிய யோகம், பாடல்- 62, 63 l