பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் C 45 வாராமல் இருப்பது என்பது ஒன்று. வந்த கோபத்தை வெளிக்காட்டாமல் இருப்பது ஒன்று. இவ்விரண்டனுள் இரண்டாவது கூறப்பட்டது சிறப்பில்லாத ஒன்று. அது நம்முள் பலரும் செய்கிற ஒன்று. பெரியவர்கட்குக் கோபமே வாராமல் இருக்க வேண்டும். மனத் தெளிவால் அவர்கள் இதனை நிறைவேற்ற முடிகிறது. கோசல. மக்கள் சிந்தையில் தெளிவு பெற்று அதனால் கோபம் வாராமல் காத்துக்கொண்டு, அதன் பயனாகக் குற்றம் என்பதையே செய்யாமல் இருக்கிறார்கள் என்பதைக் கவிஞன் இதோ சுவைபடக் கூறுகிறான்: - கூற்றம் இல்லைஓர் குற்றம் இலாமையால், சீற்றம் இல்லைதம் சிந்தையின் செம்மையால் . (70); குற்றஞ் செய்யாதவர்மேல் கூற்றுவன் செல்வதில்லை என்றமையின், அந்நாட்டு மக்கள் இறப்பதே இல்லை, என்று யாரும் நினைந்துவிட வேண்டா. இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இங்கே கூற்றம்' என்றது. அகால மரணத்தையே! காலன், கூற்றம்' என்பவை வெவ்வேறு பொருளைக் கொண்ட சொற்கள். கால முடிவிலே உயிர் போவதைக் காலன் வாய்ப்பட்டான்' என்றும், இடைக்கூற்றில் தற்கொலை, துக்குத் தண்டனை, கொலை முதலியவற்றால் உயிர் போவதைக் 'கூற்றுவன் வாய்ப்பட்டான்' என்றும் சொல்லுவோம். எனவே, அந்நாட்டில் அகாலச் சாவு இல்லை என்றே. கொள்ள வேண்டும். அதாவது, அந்த நாட்டில் பழக்க வழக்க ஒழுக்கத்தால் குற்றமிழைத்து அதனால் மீளா நோய்க்காளாகி அகால மரணத்திற்கு ஆளாவதோ, அன்றிச் சமுதாய வாழ்வில் தீய குற்றங்கள் புரிய அதனால் துாக்குத் தண்டனையடைவதோ, அல்லது எவருடனும் கொண்ட பகை காரணமாகக் கொலை செய்யப்படுவதோ இல்லை. காரணம், அந்நாட்டு மக்களின் மனச்செம்மை. தான் என்கிறான் கவிஞன். இங்குக் கூறப்பெற்ற,