பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 0 அ. ச. ஞானசம்பந்தன் "சிந்தையின் செம்மை என்பது, வாழ்க்கையில் எத்துணைப் பயன்படக்கூடியது என்பதை நம்முள் ஒவ்வொருவரும் சற்று ஆராய வேண்டும். வாழ்க்கையில் பெற வேண்டிய பேறுகள் அனைத்திலும் தலையாயது சிந்தையின் தெளிவாகும். இது கருதியே போலும் பெரியோர்கள் செல்வம் என்பது சிந்தையின் நிறைவு' என்று கூறினார்கள்! இனி அந்தப் பாடலின் பின்னிரண்டு அடிகளைப் பார்க்கலாம்: ஆற்ற நல்லறம் அல்லது இலாமையால் ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே! முன்னிரண்டடிகள் மக்கள் மனத்துச் செம்மையை வெளிப் படுத்தினால், இந்த இரண்டடிகளும் ஆட்சிச் செம்மையை விளக்குகின்றன. அந்நாட்டு மக்கட் பண்பும் ஆட்சிச் சீர்மையும், தீயன புரிய எண்ணிச் செல்வோர்க்குங்கூட அங்கு இடமோ, வாய்ப்போ, வழியோ இல்லாமல், நல்ல செயல்களுக்கே வழி வகுத்து வைத்திருக்கின்றன. எனவே, அந்நாட்டிற்கு நாளுக்கு நாள் ஏற்றம் (உயர்வு) ஏற்படு கிறதே அன்றி இழி தகவு’’ (மேனின்றவர் தாழ்வது) என்பது சிறிதும் இன்று என்று கவிஞன் கூறுவது எவ்வளவு நயமாய் இருக்கிறது பார்த்தீர்களா! கள்வர் இல்லை - இந்நிறைவால் அம்மக்கள் பெற்ற பயனைக் கவிஞன் மேலும் கூற முற்படுகிறான். கோசல நாட்டில் மக்கள் தம்முடைய பொருளைப் பாதுகாத்து வைப்பதுகூட இல்லையாம். ஏன் எனில் அப்பொருளைக் கவர்ந்து கொண்டு போக அவண் ஒருவரும் இல்லை. களவு செய்யும் மனப்பான்மையைத் தடுப்பது அத்துணை எளிதன்று. 3 குமரகுருபர அடிகளார்; சிதம்பர மும்மணிக் கோவை. பிரபந்தத் திரட்டு, 476.