பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் C 47 இதனை வென்றவர்களைப் போற்றத்தான் வேண்டும். இதனாலேயே போலும் கள்ளாமை என்ற அதிகாரத்தை வள்ளுவப் பெருந்தகையார் துறவற இயலில் வைத்துப் போனார்! துறந்தேமென்று கூறுவாரும் துறத்தற்கரிய ஒரு மனப்பான்மை போலும் இது! எனவே, கோசல மக்களிடம் இப்பண்பைக் கவிஞன் கூறும்பொழுது நாம் வியப்படையத்தான் வேண்டியிருக்கிறது. கள் வார் இலாமைப் பொருள்காவலும் இல்லை; யாதும் கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ! (165) என்று கவிஞன் கூறுகையில் இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறான். - - க ள வு மனப்பான்மை இல்லாதிருப்பதற்குரிய காரணமும் நன்கு விளங்குகிறது நான்காம் அடியினால். மக்கள் பண்பு எத்துணை உயர்ந்ததாயினும், வறுமை மிக்க வழியும் பசி மிகுந்த வழியும் பண்பாடு விடை பெற்றுக்கொள்ளும். எனவே, இவை இரண்டும் அங்கில்லை என்று கூறுமுகத்தான் தனது கூற்றை நிலை நாட்டுகிறான் கவிஞன். இல்லார் யாரும் இல்லை என்று கூறியதால், பசிப்பிணி இன்றியும் பிறர் பொருளை விரும்புபவர் உண்டு ஆகலின், அத்தகையோரும் இல்லை என்பதை விளக்க, கொடுப்பார்களும் இல்லை; ஏன் எனில், கொள்வார் இல்லாத காரணத்தால் என்று நான்காம் அடியில் அழகாகக் கூறிவிட்டான். வறுமையும் பசியும் இல்லாமல் இருந்ததாகப் பறை சாற்றிய ரஷியா போன்ற நாடுகளிற்கூட, அனைவரும் எல்லாச் செல்வமும் பெற்றிருந்தார்கள் என்று கூறுவதற். கில்லை. பெருஞ்செல்வமும் பெரிய அதிகாரமும் படைத்த ஆட்சியாளரும், ஆகாரத்தைத் தவிர வேறு வசதியற்ற ஆளப்படுவோரும் அந்நாட்டில் உண்டு என்பதை நா.