பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் C 49 திருந்தது என்று கூறுகிறான் கம்பநாடன். இது எவ்வாறு என்பது பற்றிப் பின்னர்க் காண்போம். - - நாட்டை ஆளும் மன்னன் செய்ய வேண்டிய இன்றி யமையாக் கடப்பாடுகள் சில உண்டு. அவற்றை வரிசைப் படுத்துகிறான் கவிஞன். முறை அறிந்து அவாவை விக்கி முனிவழி முனிந்து வெஃகும் இறைஅறிந்து உயிர்க்கு கல்கும் இசைகெழு வேந்தன்... (50) [மரபையும் வரி வாங்கும் நீதியையும் அறிந்து, வரிப் பணம் என்று பேராசையுடன் சேகரிக்காமல், கோபிக்கும் நேரத்தில் கோபித்து, உயிர்கட்கு இரங்கும் புகழ் பெற்ற மன்னன்.) .. - - அரசன் கடமை நீதியாகிய சட்டத்தை அரசன் நன்கு அறிந்திருத்தல் மிக இன்றியமையாததாகும். சட்டத்தினும் மேற்பட்ட ஒன்று மரபு' எனப்படுவது. ஒரு நாட்டில் ஒரு காலத்தில் ஏற்பட்ட சட்டம், அதே நாட்டுக்குக் கூடச் சில காலம் கழித்துப் பயன்படும் என்று கூறுவதற்கில்லை. அவ்வாறாயின், ஒரு நாட்டுச் சட்டம் பிறிதொரு நாட்டுக்கும் ஏற்றதாகும் என்று கூறுவதைக் காட்டிலும் அறியாமை வேறு இல்லை. அந்த அந்த நாட்டின் மரபுகளை அரசன் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வந்த கவிஞன், முறை அறிந்து' என்று கூறுகிறான். இம்மரபை அறிந்து இதன் வழி வாழாமல் தடுப்பது ஒருவனுடைய அவா அல்லது ஆசையாகும். தன்னைப் பற்றியும் தனது நலத்தைப் பற்றியும் ஒயாது நினைப்பவன், பிறர் பொருட்டு வாழ முடியாததாகலின், அவாவை நீக்கி என்று கவிஞன் அடுத்துக் கூறினான். இனிக் 4 سدیدی